Advertisment
Presenting Partner
Desktop GIF

இந்தியன் 2 முதல் கங்குவா வரை: 2024-ல் பலத்த அடி வாங்கிய பான் இந்தியா திரைப்படங்கள்!

பான் இந்தியா படங்களின் கலாச்சாரம் உருவாகி 10 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், 2024-ல் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்ற பான் இந்தியா படங்களை பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Kamal Surya India

இந்திய திரையுலகில், பான் இந்தியா படங்கள் என்ற வார்த்தை எழுச்சி பெற்று பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்க தொடங்கி ஒரு தசாப்தம் ஆகிவிட்டது. இன்னும் 7 மாதங்கள் கடந்தால், ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற பாகுபதி தி பிகினிங் திரைப்படம் தனது 10 வயதை எட்டிவிடும். தற்போது வெளியாகும் பல பான் இந்தியா படங்களுக்கு அச்சாரம் அமைத்தது இந்த பாகுபலி திரைப்படம் தான்.

Advertisment

Read In English: Indian 2, Kanguva, Bade Miyan Chote Miyan and more: 2024 is the year audiences mercilessly rejected shoddy ‘pan-Indian’ films

தற்போது நாடு முழுவதும், பான் இந்தியா திரைப்பட கலாச்சாரம் பெருகிவிட்ட நிலையில், ஒரு சில திரைப்படங்கள், அந்த மொழியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டிருந்தாலும், மற்ற மொழி நடிகர்களை படத்தில் நடிக்க வைத்து பான் இந்தியா படங்களாக மாற்றும் முயற்சிகளும் நடந்து வருகிறது. மேலும் ஒரு மொழியில் எடுக்கப்படும் ஒரு படம், பான்இந்தியா படமாக வெளியிட வேண்டும் என்பற்காக, மற்ற மொழி நடிகர்களை நடிக்க வைத்து அந்தந்த மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

இதன் காரணமாக பான்-இந்தியன்" படங்களின் எழுச்சி ஒரு பக்கம் இந்திய சினிமாவிற்கு ஒரு வரமாகவும் மற்றொரு பக்கம் சாபமாகவும் உள்ளது. நேர்மை என்றால் பான்இந்தியா திரைப்படங்கள் அதிக கலெக்ஷன் மற்றும் பாக்ஸ்ஆபீஸ் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது. அதேபோல், சினிமாவுக்கு அதிக முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளன. அதிகம் அறியப்படாத பிராந்திய மொழி திரைப்படங்கள் பான் இந்தியா கலாச்சாரத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisment
Advertisement

அதே சமயம் ஒரு திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதன் தரத்தை மதிப்பிடுவது மற்றும் பலதரப்பட்ட ரசிகர்களை கவரும் வகையில், மொழி அடிப்படையிலான மண் அந்தந்த மாநில கலாச்சாரம் இல்லாமல் அவற்றை நசுக்கும் அளவுக்கான திரைப்படங்கள் வருவது இப்போது அதிகமாகிவிட்டது. இதன் விளைவாக, திரைப்படங்கள் பொதுவானதாகவும் தனித்துவம் இல்லாததாகவும் மாறத் தொடங்கியுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பான் இந்திய திரைப்படங்களுக்கு அதிக கவனம் இருந்தபோதிலும் தற்போது,பான் இந்தியா படங்கள் மீதான ஈர்ப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக குறைந்து வருகிறது. தயாரிப்பாளர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளை வைத்து பிரம்மாண்டாக பான் இந்தியா படங்களை எடுத்து வெளியிடுவது இப்போது வழக்கமாகிவிட்டது என்றாலும், இந்த படங்கள் ரசிகர்கள் மனதை கவர தவறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும. முன்னணி நட்சத்திரங்கள், பிரம்மாண்டமான ப்ரமோஷன் என பல யுக்திகளை கையாண்டாலும், இப்போது பான் இந்திய திரைப்படங்களை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் விரும்புவதில்லை.

அந்த வகையில் 2024-ம் ஆண்டு வெளியான பல பான் இந்தியா திரைப்படங்கள், ரசிகர்கள் மனதை கவர முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளது. 2024-ம் ஆண்டு தனது முடிவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு பல சூப்பர் ஸ்டார்களுக்கும் திரைப்பட இயக்குனர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்று சொல்லலாம், ஏனெனில் இந்த ஆண்டு வெளியான பல படங்களைய நிராகரித்து, ரசிகர்கள் தான் ஒரு படத்தின் வெற்றியின் இறுதி தீர்ப்பை எழுதுபவர்கள் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் பட்ஜெட், அதில் நடித்துள்ள நட்சத்திரங்கள் என எதையும் பொருட்படுத்தாமல், அதற்கு பதிலாக ரசிகர்கள் தங்களின் சொந்த நேரம், பணம் மற்றும் ரசனைகளை மதிப்பதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். "பான்-இந்தியன்" டேக், ஸ்டார் பவர் அல்லது பிரம்மாண்டமான காட்சிகளால் பிரமிக்கவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், 2024 இல் பல படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், ஒடிடி தளத்தில் வெளியானபோது பல்வேறு ட்ரோல்களை சந்திக்கும் அளவுக்கு கடுமையாக விமர்சனங்களை பெற்றது.

அத்தகைய விதியை எதிர்கொண்ட முதல் பெரிய படம் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக, கடந்த ஜனவரி மாதம் வெளியான இந்த படம்,  மோகன்லாலின் மோசமான நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திரைப்படம் என்று கூறப்பட்டது, இது கேரளா முழுவதும் ரசிகர் நிகழ்ச்சிகள் உட்பட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், படத்தின் கதையும் காட்சியமைப்பும், வழக்கமான சூப்பர்ஸ்டார் நடிகருக்கு பில்டப் கொடுக்கும் வகையில் இருந்து விலகி, ப்ரமோஷன் மற்றும் விளம்பர மொழியில் தவறான வழிமுறைகள், எந்த விஷயத்தை கருத்தில் கொள்ளாமல் விளப்பரப்படுத்தியதன் விளைவாக திரைப்படம் பின்னடைவைச் சந்தித்தது. கதை தேவையில்லாத போதிலும், தயாரிப்பாளர்கள் அதை "பான்-இந்தியன்" திரைப்படமாக வெயிட்டபோதிலும் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் மோகன்லாலுக்கு தோல்விப்படமாக அமைந்தது.

பாலிவுட்டிலும் பெரிய பட்ஜெட் தோல்விகளை சந்தித்தது. அலி அப்பாஸ் ஜாபரின் படே மியான் சோட் மியான், அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த படங்கள், அஜய் தேவ்கனின் மைதான், வாசன் பாலாவின் ஆலியா பட் நடித்த ஜிக்ரா, சாகர் ஆம்ப்ரே மற்றும் புஷ்கர் ஓஜாவின் யோதா, சித்தார்த் மல்ஹோத்ரா, வித்ரா மல்ஹோத்ரா, வித்ரா மல்ஹோத்ரா ஆகியோர் நடித்த படங்கள் என அனைத்துமே, வெற்றியை ஈட்ட தவறிவிட்ட படங்கள்.

எவ்வாறாயினும், 2024 இல் பாலிவுட் திரையுலகம் சந்தித்த இந்த கணிசமான பகுதி இப்படியே நீடித்தால்,"பான்-இந்தியன்" போக்கின் வீழ்ச்சிக்கு அப்பால் சினிமாத்துறை பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். உண்மையில், 2024 பாலிவுட்டின் வரலாற்றில் மிக மோசமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கிறது.

அதேபோல், தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், பெரும்பாலான முக்கிய நட்சத்திரங்கள் குறைவான பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டியுள்ளதால், 2024 அவர்களுக்கும் மோசமான ஆண்டு என்றே சொல்லலாம் இதில் மிகப்பெரிய ஏமாற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி இயக்குனர் எஸ் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் தான். கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான கிளாசிக் திரைப்படமான இந்தியன் படத்தில் இருந்த சேனாபதி கேரக்டரில் கமல்ஹாசன் மீண்டும் நடித்திருந்தார்.  

இந்தியன் திரைப்படம் கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத்தந்தாலும், அதன் தொடர்ச்சியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் கமல்ஹாசனுக்கும் அதன் இயக்குனர் ஷங்கருக்கும், களங்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்தியன் 2 வெளியிடப்படுவதற்கு முன்பே மூன்றாவது பாகம் அறிவிக்கப்பட்டது, ஷங்கர் இந்தியன் 2 அதன் நீளம் காரணமாக இரண்டாகப் பிரிக்கப்பட்டதாக படக்குழு அறிவித்திருந்தனர். கமலின், ஷங்கரின் ஆகியோரின் மீதான அபரீதமான நம்பிக்கையின் காரணமாக தயாரிப்பாளர்களை அதன் தொடர்ச்சிகளை முன்கூட்டியே அறிவிக்க தூண்டியுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு, "பான்-இந்தியன்" போக்கால் உருவான எதிர்விளைவு போக்குகளின் அடையாளமாக மாறிவிட்டது.

பல படங்களும் இதேபோன்ற விதியை சந்தித்தன. மலைக்கோட்டை வாலிபன் மற்றும் இயக்குனர் கொரட்டால சிவாவின் இயக்கத்தில் வெளியான தேவார: பாகம் 1. ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான் மற்றும் ஜான்வி கபூர் நடித்தது இந்த படத்தில் நடித்திருந்தனர். அதேபோல் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்த, புஷ்பா 2: தி ரூல், நாக் அஷ்வின் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, கமல்ஹாசன் ஆகியோர் நடித்த கல்கி AD 2898, சிவாவின் இயக்பத்தில சூர்யா நடித்த கங்குவா  என பல பிரம்மாண்டமான படங்கள் அதன் அடுத்த பாகத்திற்காக வடிவமைக்கப்பட்ட திரைப்படங்களாக வெளியானது. இந்த திரைப்படங்களை மக்கள் விரும்பாமல் போகலாம் என்று ஒரு நொடி கூட யோசிக்காமல், அதன் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதேபால், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிய "பான்-இந்தியன்" படங்களில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT),; ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் வெளியாக சிங்கம் அகைன், அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார், கரீனா கபூர் கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், டைகர் ஷெராஃப், அர்ஜுன் கபூர் மற்றும் சல்மான் கான் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். டி.ஜே.ஞானவேலின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்த வேட்டையன் ஆகிய படங்கள்.

இந்தத் திரைப்படங்கள் கணிசமான வருவாயைப் பெற்றிருந்தாலும் - புஷ்பா 2 தவிர மற்ற படங்கள், அந்தந்த மொழிகளிலேயே எதிர்பார்த்த வெற்றியை பெற தவறிவிட்டது, இருப்பினும், புஷ்பா 2 தயாரிப்பாளர்கள் மல்டிபிளக்ஸ்கள் திரையரங்குகளில் முதல் 10 நாட்களுக்கு வேறு எந்தப் படங்களையும் திரையிடக்கூடாது என்று ஒப்பந்தம் செய்து படத்தை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது போன்ற உத்திகள் இல்லாமல் படத்தின் வெற்றி குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment