Advertisment

களத்தூர் கண்ணம்மா டூ இந்தியன் 2; கமல்ஹாசனுக்கு மாஸ் டைட்டில் கார்டு போட்ட ஷங்கர்!

உலக நாயகன் கமல்ஹாசனின் திரைத்துறை சாதனையைக் குறிப்பிடும் விதமாக, இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 டைட்டில் கார்டு மாஸாக கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Indian 2 Glimpse

உலக நாயகனுக்கு இப்படி ஒரு டைட்டில் கார்டு போட்ட இயக்குனர் ஷங்கரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.



உலக நாயகன் கமல்ஹாசனின் திரைத்துறை சாதனையைக் குறிப்பிடும் விதமாக, இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 டைட்டில் கார்டு மாஸாக கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisment

சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் நடித்துள்ள் இந்தியன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்தியன் 2 திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

  ஒரு படத்தின் டைட்டில் கார்டு ரசிகர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும், ஏனென்றால், திரையரங்குக்கு வரும் ரசிகனை முதல் காட்சியிலேயே கவர்ந்து அவனை உற்சாகப்படுத்த வேண்டும். அதனால், மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு டைட்டில் கார்டு உருவாக்குவதில் இயக்குனர்கள், படத் தயாரிப்புக் குழுவினர் என மிகவு மெனக்கெட்டு கிரியேட்டிவாகவும் புதுமையாகவும் அதே நேரத்தில் அந்த ஹீரோவின் மாஸ் பிம்பத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும்.

அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனின் கண்ணை வைத்தே ஒரு மிரட்டலான டைட்டில் கார்டு போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதேபோல, விஜய்யின் லியோ படத்திலும் மார்வெல் தீமில் ஒரு டைட்டில் கார்டு போட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் டைட்டில் கார்டு எப்படி இருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இயக்குனர் ஷங்கர், உலகநாயகன் கமல்ஹாசனின் திரைத்துறை சாதனைகளைக் குறிப்பிடும் விதமாக, ஒரு மாஸ் டைட்டில் கார்டு போட்டு கமல் ரசிகர்களை வேற லெவலில் உற்சாகப்படுத்தியுள்ளார்.

70 வயதாகும் உலக நாயகன் கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இதுவரை 232 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் அதிகமான புதிய முயற்சிகளை செய்தவர் யார் என்றால் அவர் கமல்ஹாசன்தான். அந்த புதிய முயற்சிகள் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் புதுப்புது விஷயங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தும் முயற்சியை கமல்ஹாசன் கைவிட்டதில்லை. 

உலக நாயகன் கமல்ஹாசன் போடாத கெட்டப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். இதைக் குறிப்பிடும் விதமாக இந்தியன் 2 படத்ஹ்டின் டைட்டில் கார்டை உருவாக்கியுள்ளனர்.

கமல்ஹாசன் படத்தை முதல் நாள், முதல் காட்சி பார்த்துவிட வேண்டும் என திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்கள் இந்தியன் 2 படத்தின் டைட்டில் கார்டைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். இந்தியன் 2 டைட்டில் கார்டு வேற லெவலில் அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியன் 2 டைட்டில் கார்டு எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தையாக கமல்ஹாசன் நடித்தது முதல் அரங்கேற்றம், நாயகன், சத்யா, குணா, இந்தியன், அவ்வை சண்முகி, ஹே ராம், குருதிப்புனல், ஆளவந்தான், சகலகலா வல்லவன், தசாவதாரம், விஸ்வரூபம், இந்தியன் 2 என ஒவ்வொரு படத்துக்கும் எந்தளவுக்கு கமல்ஹாசன் கஷ்டப்பட்டு தனது தோற்றத்தையே மாற்றி ரசிகர்களுக்காக நடித்து வருகிறார் என்பதை ஒவ்வொரு மாஸ்க்காக கழண்டு கடைசியில் இந்தியன் 2 தாத்தா மாஸ்க் வரை வருகின்றன. பிறகு, அனைத்து மாஸ்க்குகளும் ஒன்றாக சேர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் என்கிற டைட்டில் கார்டு வருகிறது. 

உண்மையில், இந்தியன் 2 டைட்டில் கார்டு கிரியேட்டிவாகவும் மாஸாகவும் இருப்பதாகக் கூறி கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். உலக நாயகனுக்கு இப்படி ஒரு டைட்டில் கார்டு போட்ட இயக்குனர் ஷங்கரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்தியன் 2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. டோலிவுட் ரசிகர்கள் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment