Advertisment

"கிழம்.. புத்திசாலி... ஆபத்தானவர்"! மிரட்டும் 'இந்தியன் 2' செகண்ட் லுக் போஸ்டர்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
"கிழம்.. புத்திசாலி... ஆபத்தானவர்"! மிரட்டும் 'இந்தியன் 2' செகண்ட் லுக் போஸ்டர்!

'இந்தியன் 2' படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன். ஊழல், லஞ்சம் ஆகிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இப்படம் மெகா ஹிட்டானது. இப்படத்திற்கு பின்னா் கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை.

அதன்பிறகு, தற்போது 'இந்தியன் 2' எனும் பிரம்மாண்டம் மூலமாக மீண்டும் ஷங்கர் - கமல் கூட்டணி இணைந்துள்ளது. காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க, அனிருத் இசையமைக்கும் 'இந்தியன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜன.15ம் தேதி வெளியானது.

'இந்தியன்' படத்தில் கமல்ஹாசன் கையாண்டிருந்த வா்மக்கலைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் கமல்ஹாசன் வா்மக்கலையுடன் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் ரசிக்கும் வகையில் இருந்தது.

January 2019

இந்நிலையில், இன்று இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியன் 2 படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அடுத்தடுத்து வெளியாகும் கமலின் லுக்ஸ் மக்கள் நீதி மய்யத்தினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாளை (ஜன.18) இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது.

மேலும் படிக்க - கமல் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலை விட இனிப்பான செய்தி

Kamal Haasan Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment