இந்தியன் 2 தாத்தாவுக்கு 106 வயசாச்சே! எப்படி சண்டை போட முடியும்? ஷங்கர் சொன்ன நச் பதில்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
Advertisment
இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன், அனிருத், சித்தார்த், பாபி சிம்ஹா கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், செய்தியாளர் ஒருவர். இந்தியன் முதல் பாகத்திலேயே சேனாதிபதி 1918 பிறந்தவராக காட்டப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் இந்தியன் 2 படத்தில் அவருக்கு 106 வயது இருக்கும், அப்படி இருக்கும் போது அவரால் எப்படி பறந்து பறந்து சண்டை போட முடியும் என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ஷங்கர், சீனாவில் தற்காப்பு கலையில் சிறந்த மாஸ்டரான லீ சிங் யுவான், 120 வயதிலும் பறந்து பறந்து சண்டை போடுவார். அவரை போலவே சேனாதிபதியும் வர்மக்கலையில் கைதேர்ந்தவர். சுய ஒழுக்கத்துடன் சரியான உணவு, யோகா, தியானம் போன்றவற்றை அனைவரும் கடைபிடித்தால் வயது ஒரு விஷயமே இல்லை, என பதிலளித்து அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“