இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்வி கபூர் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு, கணவர் குழந்தைகளுடன் இங்கேயே வாழ வேண்டும் என்று தனது விருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இந்தி சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் இவர், கடந்த வருடம் ஜூனியர் என்.டி.ஆர்,நடிப்பில் வெளியான தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் ராம்சரணுடன் இணைந்து நடித்து வரும் நிலையில், விரைவில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது அம்மா ஸ்ரீதேவி இறந்தவுடன், ஆன்மீகத்தில், அதிக நாட்டத்துடன் இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது, திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், திருப்பதியில் படியில் நடந்தே சென்று தரிசனம் செய்யும், ஜான்வி, காதலன் ஷிகர் பஹாரியாவுடனும் தரிசனம் செய்துள்ளார். சமீபத்தில் கூட, தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன், 3550 படிக்கட்டுகள் நடந்தே சென்று தரிசனம் செய்துள்ளார்.
மேலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது திருப்பதிக்கு வந்து செல்லும், ஜான்வி, அவ்வப்போது நேர்காணல்களில் திருப்பதி குறித்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது இந்தியில் இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, ஜான்வி கபூர், திருமணம் குறித்து கேட்ட கேள்விக்கு, திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். கணவர் மற்றும் குழந்தைகளுடன், திருமலையில் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.