/tamil-ie/media/media_files/uploads/2022/04/Shuti-Haasan.jpg)
SHruti Haasan Instagram Post :தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக 7-ம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். தொடர்ந்து விஜய், அஜித் சூர்யா, தனுஷ் விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுக்கு ஜொடியாக நடித்த இவர், அதே வேகத்தில் தெலுங்கு சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்தார். தற்போது பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், அடுத்து பாலகிருஷ்ணா சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ருதிஹான, அவ்வப்போது தனது காதலுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் உரையாடி வருகிறார். இந்த உரையாடலின் போது ஒரு சில ரசிகர்கள் தாறுமாறாக கேள்வி கேட்பது அதற்கு ஸ்ருதிஹாசன் சாமார்த்தியமாக பதில் சொல்வதும், அவ்வப்போது நடந்து வருகிறது.
தனது ஆளுமை, கோத் மீதான விருப்பம் கருப்பு மற்றும் டார்க்கான லிப்ஸ்டிக் மீது ஆர்வம் கொண்ட ஸ்ருதிஹாசன், பொதுவாக தான் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களில் இதையே அதிகளவு பயன்படுத்தி வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தாலும், அவ்வப்போது நெட்டிசன்களிடம் இருந்து மோசனமான கருத்தக்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
ஆனால்,இத்தகைய எதிர்ப்புகளை எப்படி கையால்வது என்று சரியாக தெரிந்து வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது எல்லை மீறும் ரசிகர்களுக்கு தனது பதிலடியை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், ஸ்ருதி தனது இன்ஸ்டா ஃபேமுடன் ரசிர்களுடன் பேசினார். அப்போது நெட்டிசன் ஒருவர், உங்களது உதடு அளவு என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், அதை எப்படி அளவிடுகிறீர்கள்?' என்று கேட்டு தனது செல்பி புகைப்படத்தை அனுப்பி நீங்களே அளவிட்டு சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.