இந்திய சினிமாவில், சில நடிகைகள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை ஒரு மர்மமான திரைக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்தாலும், தனது சிறப்பான நடிப்பின் மூலம், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியதே இல்லை. அந்த வரிசையில், தனது பன்முகத்தன்மைக்கும் சிறப்பான நடிப்புக்கும் பெயர் பெற்ற ஒரு புதிரான நடிகையாக இருக்கும் ஒருவரின், தனிப்பட்ட வாழ்க்கையை தெரிந்துகொள்வது குறித்து, பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.
பல முக்கிய நபர்களுடன் இணைத்துப் பேசப்பட்டாலும், அவர் தனது தனிப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்து, தனது புகழ்பெற்ற வாழ்க்கையில் கவனம் செலுத்தியுள்ளார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை. இது குறித்து இந்தியா டாட் காம் இணையத்தில் வௌயாகியுள்ள செய்தியின்படி, இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருக்கும் தபு தான். அவரின் உண்மையான பெயர் தபஸ்ஸம் பாத்திமா ஹாஷ்மி என்பதாகும்.
தபுவின் திரைப்பயணம், விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட பல கேரக்டாகளாலும், தனிமையில் வாழ வேண்டும் என்ற அவரது உறுதியையும் குறிப்பிட்டு செல்ல வேண்டியுள்ளது. தபுவின் முதல் அறியப்பட்ட உறவு, நடிகர் சஞ்சய் கபூருடன் இருந்ததாக கூறப்படுகிறது. மறைந்த புகழ்பெற்ற நடிகர்-இயக்குநர் சதீஷ் கௌசிக் இயக்கிய அவர்களது அறிமுகப் படமான 'பிரேம்' படப்பிடிப்பின் போது இந்த காதல் மலர்ந்ததாகவும், இந்த உறவு குறுகிய காலமே நீடித்தாலும், ஊடகங்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈத்துள்ளது,
அதன்பின், அவர் இயக்குநர்-தயாரிப்பாளர் சஜித் நாடியட்வாலாவுடன் இணைத்துப் பேசப்பட்டார். 'சன்னி தியோல்-சல்மான் கான் நடித்த ஜீத்' திரைப்படத் தயாரிப்பின் போது அவர்களது உறவு மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சஜித்துக்கு தனது மறைந்த மனைவி திவ்யா பாரதி மீதான உணர்வுகள் நீடித்ததால், அவர்களது உறவில் ஒரு தடை ஏற்பட்டது, இதனால் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகறிறது.
தபுவின் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் பேசப்பட்ட அத்தியாயம், தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவுடனான அவரது 10 ஆண்டுகள் நீண்ட உறவுதான். நாகார்ஜுனா திருமணமானவர் என்றாலும், அவர்களது பிணைப்பு வலுவாகவும் நீடித்ததாகவும் இருந்தது. தபு ஒரு எதிர்காலத்தை ஒன்றாக எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் நாகார்ஜுனா தனது மனைவியை விட்டுப் பிரிய மாட்டார் என்பதை உணர்ந்ததும், அவர் உறவை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-132441-2025-07-09-13-25-06.png)
இந்த முடிவு, வலியுடன் கூடியதாக இருந்தாலும், அவரது வலிமையையும் சுயமரியாதையையும் எடுத்துக்காட்டியது. நாகார்ஜுனா தபுவை ஒரு "சிறந்த நண்பர்" என்று குறிப்பிட்டுள்ளார், இது அவர்களது கடந்த கால தொடர்பின் ஆழத்தை உணர்த்துகிறது. தபு 2023 இல், விஷால் பரத்வாஜ் 'குஃபியா' படத்தில், 'ரா' ஏஜெண்ட்டாக நடித்தார். 2024 இல், கரீனா கபூர் கான் மற்றும் கிருதி சனோன் ஆகியோருடன் இணைந்து ‘க்ரூ’ என்ற படத்தில் நடித்தார்.
இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது, மேலும் தபுவின் அனுபவமிக்க விமானப் பணிப்பெண் கதாபாத்திரம் அதன் ஆழத்திற்கும் நகைச்சுவைக்கும் பாராட்டப்பட்டது. வரும் காலத்தில், தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ள திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமூகவலைதளங்கில் ஆக்டீவாக இருக்கும் தபு அவ்வப்போது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் தபு கடைசியாக கடந்த 2000-் ஆண்டு வெளியான ஜோதிகாவின் சினேகிதியே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார், இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, அந்த படத்தில் தபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் நடிகரின் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.