/indian-express-tamil/media/media_files/2025/09/23/gvp-2025-09-23-17-35-49.jpg)
71st National Film Awards 2025 Winners
National Awards 2025 Winners List:71-வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இதில், புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், ராணி முகர்ஜி, விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் பலர் தேசிய விருதுகளைப் பெற்றனர்.
ஜவான் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கான் தனது முதல் தேசிய விருதைப் பெற்றாலும், டுவல்த் ஃபெயில் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற விக்ராந்த் மாஸ்ஸியுடன் இந்த கௌரவத்தைப் பகிர்ந்து கொண்டார். அதேபோல் விது வினோத் சோப்ராவின் டுவல்த் ஃபெயில் படமும் சிறந்த திரைப்படத்திற்கான தேசி விருதைப் பெற்றது, அதே நேரத்தில் விசித்திரமான நகைச்சுவை படமான காதல் - எ ஜாக்ஃப்ரூட் மிஸ்டரி சிறந்த இந்தி படமாக கௌரவிக்கப்பட்டது.
மிஸஸ் சாட்டர்ஜி vs நார்வே படத்தில் சிந்த நடிப்பை வழங்கிய நடிகை ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், திரைப்படத் துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக, 71வது தேசிய திரைப்பட விருதுகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றார். தமிழ சினிமாவை பொறுத்தவரை, தனுஷின் வாத்தி படததிற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்க்கு சிறந்த இசை இயக்குநருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்ட பார்க்கிங் படத்திற்காக அந்த படத்தின் தயாரிப்பாளர் சினிஷ் விருரதை பெற்றுக்கொண்டார், அதேபோல் பார்ககிங் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வெற்றியாளர்களுக்கும் ஒரு பதக்கம், ஒரு தகுதிச் சான்றிதழ் மற்றும் ஒரு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. தாதாசாகேப் பால்கே விருது, ஆறு திரைப்பட விருதுகள், மற்றும் மூன்று அம்சமற்ற திரைப்படம் மற்றும் சினிமா பற்றிய சிறந்த எழுத்து விருதுகள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுகளுக்கு தங்கத் தாமரை வழங்கப்பட்டது. மீதமுள்ள பிரிவுகளுக்கு வெள்ளித் தாமரை வழங்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.