சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை ஒரு நடிகரை திருமணம் செய்து விட்டு, அந்த நடிகரின் உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் ஆகியோருடன் நடிப்பது வழக்கமான ஒன்று. சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, திரையில் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு அக்காவாக நடித்திருந்தது ஒரு பெரிய எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஆனால் திரையில் அக்காவுடன் ரொமான்ஸ் செய்த ஒரு நடிகர், நிஜத்தில் தங்கையை திருமணம் செய்துகொண்டார். அவர் யார் தெரியுமா?
சினமாவில் இணைந்து நடிக்கும் சில ஜோடிகள் நிஜ வாழ்க்கையில் உள்ள உறவுகள் காரணமாகப் பெரும் பேசுபொருளாகி விடுகின்றனர். அத்தகைய ஒரு சுவாரஸ்யமான ஜோடி, நடிகை கரிஷ்மா கபூர் மற்றும் நடிகர் சைப் அலி கான். இவர்கள் திரையில் காதலர்களாக நடித்து, பின்னர் நிஜ வாழ்வில் மச்சான்-அண்ணி என்ற உறவால் இணைந்தவர்கள். இந்திய சினிமாவின் புகழ்பெற்ற கபூர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தான் கரிஷ்மா கபூர்.
கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான பிரபலமான திரைப்படமான "ஹம் சாத் சாத் ஹேன்" என்ற படத்தில் சைப் அலி கானுடன் இணைந்து நடித்தார். இந்த படத்தில், இவருக்கு இடையே இருந்த காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனம் ஈர்த்தது. ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு, சைப் அலி கான், கரிஷ்மாவின் தங்கை கரீனா கபூரைத் திருமணம் செய்துகொண்டார். இதனால், கரிஷ்மாவும் சைஃப் அலி கானும் நிஜ வாழ்க்கையில் மச்சான்-அண்ணி என்ற உறவால் இணைந்தனர்.
இவர்களின் திரைக் கெமிஸ்ட்ரிக்கு இந்த நிஜ வாழ்க்கை உறவு ஒரு சுவாரஸ்யமான பரிமாணத்தைச் சேர்த்தது. கரிஷ்மா கபூர், தனது திரைப்பயணத்தில் பல மறக்க முடியாத கேரக்டர்களை ஏற்று நடித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு வெளியான "ராஜா ஹிந்துஸ்தானி" படத்தில், ஒரு பணக்காரப் பெண்ணான ஆர்த்தி சேகல் கேரக்டரில் நடித்தார். ஒரு சாதாரண டாக்சி டிரைவரை அவர் காதலிக்கும் கதை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து, பெரிய பாராட்டுகளைப் பெற்றார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/12/kareena-and-saif-2025-08-12-19-37-37.jpg)
அதேபோல், 2001 ஆம் ஆண்டு வெளியான "ஜுபைதா" என்ற படத்தில், சமூக எதிர்பார்ப்புகளுக்கும் காதலுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் ஒரு பெண்ணின் கேரக்டரில் நடித்து, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். 1999 ஆம் ஆண்டு வெளியான "பிவி நம்பர் 1" படத்தில், கணவரின் துரோகத்தைச் சந்திக்கும் பூஜா மெஹ்ரா என்ற மனைவியாக நடித்தார். இந்தக் கதாபாத்திரத்தில் அவரது நகைச்சுவை உணர்வும், பன்முகத் திறனும் வெளிப்பட்டன. திரை உலகில் சிறந்து விளங்கியது போலவே, கரிஷ்மாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
2003 ஆம் ஆண்டு, அவர் தொழிலதிபர் சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த திருமணம் 2016 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. தனிப்பட்ட வாழ்க்கையில் சவால்கள் இருந்தாலும், கரிஷ்மா தொடர்ந்து பாலிவுட் துறையில் ஒரு முக்கியமான நபராகவே இருந்து வருகிறார்.சமீபத்தில், கரிஷ்மாவின் முன்னாள் கணவரான சஞ்சய் கபூர், ஜூன் 12, 2025 அன்று லண்டனில் போலோ விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.