தொழில் அதிபர்கள் முதல் மாத சம்பளம் வாங்கும் நபர்கள் வரை அனைவருமே வரி கட்ட வேண்டியது கட்டாயம். குறிப்பாக இதில் தொழில் அதிபர்களுக்கு இணையாக திரையுலகில் உள்ள நடிகர் நடிகைகள் வரி செலுத்தி வருகின்றனர். மேலும் நடிகர் நடிகைகள் பலரும் வரி செலுத்தும் முன்பே முன்பணமாக வரி செலுத்துவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2023-2024-ம் ஆண்டில் முன்பணமாக அதிக வரி செலுத்திய இந்திய நடிகர்கள் பட்டியல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
பார்ச்சூன் இந்தியா இதழ் தொகுத்துள்ள இந்த பட்டியலின்படி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் 2023-24 ஆம் ஆண்டில் ரூ92 கோடி ரூபாய் முன்பண வரி செலுத்தி வரி செலுத்தும் நடிகர்களின் பட்டியலில் முதலிடத்திலும், தமிழ் நடிகர் 'தளபதி' விஜய் ரூ80 கோடி இரண்டாவது இடத்திலும் உள்ளார். பாலிவுடு்நடிகர் சல்மான் கான் ரூ75 கோ வரி செலுத்தி மூன்றாவது இடத்திலும், பாலிவுட் ஐகான் அமிதாப் பச்சன் ரூ71 கோடி நான்காவது இடத்திலும் உள்ளனர்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரூ. 66 கோடி வரி செலுத்தி, 5-வது இடத்திலும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ரூ42 கோடி வரி செலுத்தி 6-வது இடத்திலும் உள்ளனர். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் (ரூ. 36 கோடி) 8-வது இடத்திலும், ஹிருத்திக் ரோஷன் (ரூ. 28 கோடி) 9-வது இடத்திலும், கபில் சர்மா (ரூ. 26 கோடி) 10-வது இடத்திலும் உள்ளனர். மேலும் கரீனா கபூர் ரூ. 20 கோடி, ஷாஹித் கபூர் ரூ 14 கோடி, நடிகர்கள் மோகன்லால் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் தலா ரூ.14 கோடி, கியாரா அத்வானி ரூ.12 கோடி முன்பணமாக செலுத்தியுள்ளனர்.
கத்ரீனா கைஃப் மற்றும் பங்கஜ் திரிபாதி இருவரும் 11 கோடி ரூபாய் முன்பண வரியை செலுத்தினர், அதே நேரத்தில் அமீர் கான் 10 கோடி ரூபாய் செலுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“