200 கிலோவுக்கு அதிகமாக நகைகள்; அதை பாதுகாக்க 50 காவலர்கள்: ஐஸ்வர்யா ராய் நடித்த இந்த படத்தின் வரலாறு தெரியுமா?

இந்தியாவில் வெளியான மிகவும் நீளமாக படங்களில் ஒன்றாக இருக்கும் ஜோதா அக்பர், 3 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடும்.

இந்தியாவில் வெளியான மிகவும் நீளமாக படங்களில் ஒன்றாக இருக்கும் ஜோதா அக்பர், 3 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடும்.

author-image
WebDesk
New Update
Aishwarya Rai

சினிமா துறையில் சாதாரண படங்களை விடவும், புராண மற்றும் வரலாற்று பின்னணி கொண்ட படங்களை எடுக்கும்போது, நடிகர் நடிகைகள், அளவுக்கு அதிகமாக நகைகள், அணிந்து நடிப்பது வழக்கம். அந்த வகையில், இந்தியில் வெளியான ஜோதா அக்பர் படத்தில் நடித்தபோது ஐஸ்வர்யா ராய் கிலோ கணக்கில் நகை அணிந்து நடித்துள்ளார்.

Advertisment

இந்தியில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் ஜோதா அக்பர். ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த இந்த படத்தை அஷூதேஷ் கோவரிகர் இயக்கியிருந்தார். ஐஹதர் அலி இந்த படத்திற்காகன கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருந்தார். இந்தியாவில் வெளியான மிகவும் நீளமாக படங்களில் ஒன்றாக இருக்கும் ஜோதா அக்பர், 3 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடும். வரலாற்று பின்னணி கொண்ட இந்த படம் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்து வசூலில் சாதனை படைத்தது.

இந்ததிரைப்படம், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் நடிப்புத் திறனுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது. ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் முகலாய பேரரசர் அக்பரின் மனைவி ஜோதா பாய் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஒரு ராணியாகத் தோன்ற, அவருக்கு இரண்டு மணி நேரம் மேக்கப் போடப்பட்டது. ஆனால், அவரை ஒரு உண்மையான இளவரசியைப் போல ஜொலிக்கச் செய்தது எது தெரியுமா? அவர் அணிந்திருந்த அசர வைக்கும் நகைகள்தான்.

இந்த நகைகள் சாதாரணமானவை அல்ல. இவை குந்தன் வேலைப்பாடுகளுடன் கூடிய பிரம்மாண்டமான செட்கள். மொத்தம் 70 கைவினை கலைஞர்கள் இந்த நகைகளை வடிவமைக்க இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். இந்த நகைகளின் மதிப்பு 200 கிலோவுக்கும் அதிகம் என்பதால், அவற்றைப் பாதுகாக்க 50 பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டனர். நடிகர் ஹிருத்திக் ரோஷன் அக்பர் கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Advertisment
Advertisements

ஜோதா அக்பர் திரைப்படம், உலக அளவில் ரூ. 112 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஐஸ்வர்யாவின் அற்புதமான நடிப்பு, பிரம்மாண்டமான செட், துல்லியமான மேக்கப், மற்றும் கண் கவரும் நகைகள் என அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தைத் தனித்துவமான அனுபவமாக மாற்றின. இதில், ஐஸ்வர்யாவின் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்த அந்தப் பிரம்மாண்டமான நகைகள், இன்றும் பேசப்படும் ஒரு கலைப் படைப்பாகவே உள்ளன.

Aishwarya Rai Bachchan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: