சிறு வயதில் பல விருதுகள்: இந்த சிறுமி இப்போ பெரிய நடிகை; யாருனு தெரியுமா?

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், சிறுவயதில் பல விருதுகளை வென்றுள்ளார். இவர் யார்னு தெரியுதா?

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், சிறுவயதில் பல விருதுகளை வென்றுள்ளார். இவர் யார்னு தெரியுதா?

author-image
WebDesk
New Update
Deepika Padukone

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்தி வருகினறனர். இதில் தங்களுக்கு பிடித்தமாக தான் ரசிக்கும் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களை பற்றிய தகவல்களை நாள்தோறும் தேடி வரும் ரசிகர்களுக்கு, அவ்வப்போது அவர்களின் அஸ்தான நாயகர்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

Advertisment

அந்த வகையில், தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவரின், சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. கையில் பல விருதுகளுடன் இருக்கும் இவர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களாக இருக்கும், சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான் ஆகிய மூவருடனும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் ஷாருக்கானுடன் இவர் ஜோடியாக நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை தீபிகா படுகோண் தான். முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோண் மகளான தீபிகா படுகோண், 2006-ம் ஆண்டு வெளியான ஐஸ்வர்யா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர். 2007-ம் ஆண்டு வெளியான ஓம் சாந்தி ஓம் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான தீபிகா, தொடர்ந்து கான் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார்.

Deepika Padukone

Advertisment
Advertisements

கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இவர் நடித்த பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு திரைப்படங்களும் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்து வசூலில் சாதனை படைத்திருந்தது. அதேபோல் சமீபத்தில் வெளியான கல்கி படத்தில் முக்கிய கேரக்டரில் தீபிகா நடித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்து சிங்கம் அகைன் என்ற இந்தி படததில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது அவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கையில் பல விருதுகளுடன் இருக்கும் தீபிகாவின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Deepika Padukone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: