அப்பா கொடுத்த ஐடியா; பாலியல் தொழிலில் சம்பாதித்த ரூ100 கோடி: நடிகை சொன்ன ஒற்றை பொய்யால் பறிபோன சினிமா வாழ்க்கை!

வருமான வரி சோதனையின் போது கிடைத்த பணம் பாலியல் தொழில் செய்து சம்பாதித்ததாக கூறியதால், அவரின் சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வந்துள்ளது பலரும் அறியாத ஒரு தகவல்.

வருமான வரி சோதனையின் போது கிடைத்த பணம் பாலியல் தொழில் செய்து சம்பாதித்ததாக கூறியதால், அவரின் சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வந்துள்ளது பலரும் அறியாத ஒரு தகவல்.

author-image
WebDesk
New Update
Mla Sinha

இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக இருந்த ஒருவர், வருமான வரி சோதனையின் போது கிடைத்த பணம் பாலியல் தொழில் செய்து சம்பாதித்ததாக கூறியதால், அவரின் சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வந்துள்ளது பலரும் அறியாத ஒரு தகவல்

Advertisment

இந்திய சினிமாவில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத பெயராக இருந்தவர் மாலா சின்ஹா, 1954 ஆம் ஆண்டு 'பாட்ஷா' படத்தின் மூலம் அறிமுகமான அவர், அடுத்த நான்கு தசாப்தங்களில் 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தர்மேந்திரா, குரு தத், அசோக் குமார், திலீப் குமார், மனோஜ் குமார் மற்றும் அமிதாப் பச்சன் போன்ற மாபெரும் நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், தனது திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தார். ஒரு காலத்தில், அவர் முன்னணி ஆண் நடிகர்களுக்கு சம்பளம் வாங்கியவர்.

சினிமாவில் கோடிகளில் சம்பாதித்தாலும், தனது சிக்கனமான பழக்கங்களுக்காக அறியப்பட்ட மாலா சின்ஹா, தனது வீட்டு வேலைகளைக்கூட வேலைக்காரி வைக்காமல் தானே செய்துகொண்டதாகவும் தகவல்கள் உள்ளது. ஆனால், 1978 ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது இந்த ரகசியமான வாழ்க்கை, வெளிச்சத்துக்கு வந்தது.
சோதனைக்கு வந்த அதிகாரிகள், அவரது வீட்டின் குளியலறை சுவர்களுக்குப் பின்னால் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பண நோட்டுகள் கண்டுபிடித்தனர். அந்த நேரத்தில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.100 கோடி என்று மதிப்பிடப்பட்டது.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மாலா சின்ஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது பதில் அனைவரையும் திகைக்க வைத்தது.  பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக, அவர் தனது தந்தை மற்றும் வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில், அந்தப் பணம் பாலியல் மூலம் சம்பாதிக்கப்பட்டது என்று கூறினார். இந்தத் தைரியமான, அதே சமயம் அதிர்ச்சிகரமான வாக்குமூலம், அவர் மீது மக்கள் கொண்டிருந்த மரியாதையை முற்றிலுமாகச் சிதைத்தது. இந்த ஒரு பொய், அவரது திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Advertisment
Advertisements

இந்த வாக்குமூலத்திற்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் அவரைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்கத் தயங்கினர். முன்னணி கதாநாயகர்கள் அவருடன் இணைந்து நடிக்க மறுத்தனர். ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான நடிகையாக இருந்த மாலா சின்ஹா, ஒரே இரவில் ஒட்டுமொத்த திரையுலகாலும் ஒதுக்கப்பட்டார். கோடிக்கணக்கான சொத்துக்களைச் சேர்த்திருந்தபோதிலும், ஒரு பொய்யால் ஏற்பட்ட களங்கத்தை அவரது வாழ்க்கை தாங்கிக்கொள்ளவில்லை. மாலா சின்ஹாவின் இந்த வீழ்ச்சி, ஒரு சிறிய தவறு ஒருவரின் வாழ்க்கையையும், கடின உழைப்பையும் எப்படி அழித்துவிடும் என்பதற்கு ஒரு சோகமான சான்றாக இன்றளவும் பேசப்படுகிறது.

Cinema Actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: