Advertisment

இந்திய சினிமாவின் முன்னணி நடிகை... விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் : இவரை யார்னு தெரியுதா?

இவர் யாரென்று தெரிகிறதா? என்ற கேள்வியுடன் பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
pooja Hegde

இந்திய சினிமாவின் முன்னணி நடிகை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமூகவலைதளங்களில் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ள இன்றைய காலக்கட்டத்தில் பிரபலங்கள் பலரும் தங்களது சிறுவது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகின்றனர். மேலும் இவர் யாரென்று தெரிகிறதா? என்ற கேள்வியுடன் பல முன்னணி நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

Advertisment

அந்த வகையில் முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நடிகை பெரும்பாலும் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதில் முதல் படம் சரியான வெற்றியை பெறவில்லை என்றாலும் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு விஜயுடன் நடித்த படம் பல விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனாலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்தது.

ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இந்த நடிகை, கடந்த 2012-ம் ஆண்டு தமிழில் வெளியான, முகமூடி மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அந்த நடிகை யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா? அவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது வெளியாகியுள்ள அவரின் சிறுவயது புகைப்படத்தில்,கேமராவுக்கு போஸ் கொடுக்கும் போது வெள்ளை நிற ஆடை அணிந்துள்ளார்.

அதேபோல் அவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்றில், குட்டைப் பாவாடை அணிந்துள்ளார், மற்றொரு புகைப்படத்தில், பள்ளி சீருடையை அணிந்துள்ளார். இந்தப் புகைப்படங்களில் இருப்பது பூஜா ஹெக்டே தானா என்பது பலராலும் யூகிக்க முடியாத ஒன்றாக உள்ளது. மற்றொரு புகைப்படத்தில், பூஜா ஹெக்டேவின் சகோதரர் ரிஷப் ஒரு மல்யுத்த வீரரைப் போல போஸ் கொடுத்துள்ளார். அவருக்கு அருகில் பூஜா ஹெக்டே புன்னகையுடன் இருப்பதைக் காணலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pooja Hegde
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment