/indian-express-tamil/media/media_files/m3XJ4GwNtb27MDW0MnNW.jpg)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக நேஷ்னல் க்ரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா பல படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், அவர் முதன் முதலில் ஆடிஷன் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து அஞ்சானிபுத்ரா, சமக் ஆகிய கன்னட படங்களில் நடித்த இவர், கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். குறுகிய காலத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தெலுங்கில் டியர் காம்ரேட், சரிலேரு நீக்கெவரு, புஷ்பா சீதாராமம் உள்ளிட்ட பல படங்கள் கன்னடத்தில் பெரிய வெற்றியை பெற்றது. 2022-ம் ஆண்டு வெளியான குட்பாய் படத்தின் மூலம் இந்தியில் கால்பத்தித்த ராஷ்மிகா அடுத்து மிஷன் மஜ்னு என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான அனிமல் படத்தில் ரன்பீர் கபூருடன் நடித்திருந்த ராஷ்மிகா கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் இந்த படம் ரூ1000 கோடி வசூலித்தாக தகவல்கள் வெளியானர்.
சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா அடுத்து விஜயின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூடன் நடித்து வரும் நிலையில், சாவா, சிக்கந்தர், குபேரா உள்ளிட்ட பான் இந்தியா படங்களிலும் நடித்து வரும் ராஷ்மிகா, 2016-ம் ஆண்டு வெளியா க்ரிக்கி பார்ட்டி படத்திற்காக, ஆடிஷன் நடந்தபோது அவர் நடித்து காட்டிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
#RashmikaMandanna first audition video at the age of 19 🫡pic.twitter.com/oU1cLZ3XqK
— Movies4u Official (@Movies4u_Officl) October 7, 2024
குறுகிய காலத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, முதன் முதலில் ஆடிஷனுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில்,பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.