Advertisment

28-வது வயதில் ராஷ்மிகா... முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தீயாய் பரவும் தகவல்

சமீபத்தில் ரன்பீர் கபூருடன் இவர் நடித்த அனிமல் திரைப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டாடும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக மாறியது.

author-image
WebDesk
New Update
Rashmika Mandhana Post

ராஷ்மிகா மந்தனா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு நிலவரம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கிர்க்கி பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அடுத்து தெலுங்கு படங்களில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழில், கார்த்தியுடன் சுல்தான் படத்தில் அறிமுகமான இவர், விஜயின் வாரிசு படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் ரன்பீர் கபூருடன் இவர் நடித்த அனிமல் திரைப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டாடும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக மாறியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இந்தி படங்களில் கமிட் ஆகி வரும் ராஷ்மிகா, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்தார்.

இதில் ராஷ்மிகாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அவ்வப்போது வதந்திகள் பரவி வருகிறது. மேலும் இன்று பிறந்த நாளை கொண்டாட தூபாயில் இருக்கும் ராஷ்மிகா, மயிலுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டதும், விஜய் தேவர கொண்டாவும் ஒரு மயில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதன் மூலம் ராஷ்மிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு இருவரும் துபாயில் ஒரே இடத்தில் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே பிறந்த நாளில் ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 28 வயதான ராஷ்மிகாவுக்கு தற்போது மொத்த சொத்து மதிப்பு 50 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது நாயகியாக ஒரு படத்திற்கு ரூ4 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

rashmika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment