இந்திய சினிமாவில், நெஷ்னல் க்ரஷ் என்று அழைக்கப்படும் நடிரக ராஷ்மிகா மந்தனா, பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவர், தனது காதலர் குறித்து புஷ்பா 2 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து அஞ்சானிபுத்ரா, சமக் ஆகிய கன்னட படங்களில் நடித்த இவர், கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். குறுகிய காலத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தெலுங்கில் டியர் காம்ரேட், சரிலேரு நீக்கெவரு, புஷ்பா சீதாராமம் உள்ளிட்ட பல படங்கள் கன்னடத்தில் பெரிய வெற்றியை பெற்றது. 2022-ம் ஆண்டு வெளியான குட்பாய் படத்தின் மூலம் இந்தியில் கால்பத்தித்த ராஷ்மிகா அடுத்து மிஷன் மஜ்னு என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான அனிமல் படத்தில் ரன்பீர் கபூருடன் நடித்திருந்த ராஷ்மிகா கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் இந்த படம் ரூ1000 கோடி வசூலித்தாக தகவல்கள் வெளியானர்.
சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா அடுத்து விஜயின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூடன் நடித்து வரும் நிலையில், சாவா, சிக்கந்தர், குபேரா உள்ளிட்ட பான் இந்தியா படங்களிலும் நடித்து வரும் ராஷ்மிகா, அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2 படத்தில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 5-ந் தேதி புஷ்பா படத்தின் 2-ம் பாகம் புஷ்பா தி ரூல் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம், உங்கள் வருங்கால கணவர் திரைத்துறையை சேர்ந்தவரா அல்லது எந்த துறையை சேர்ந்தவர் என்று சொன்னால், நாங்கள் ஒரு ஹிண்ட் எடுத்துக்கொள்வோம் என்று தொகுப்பாளர்கள் சொல்ல, அதற்கு ராஷ்மிகா, அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் என்று கூறியுள்ளார்.
Everyone knows about it 😉
— Venkatramanan (@VenkatRamanan_) November 24, 2024
- Rashmika reveal hints about him pic.twitter.com/DfmITB6eFY
இதன் மூலம் அவர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதை ஒப்புக்கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா குறித்த தகவல்களை இணையத்தில் பகிர்ந்து வருகினறனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.