இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா 2 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்து அவர் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாகவும் இதற்காக சென்னையில் ஆடம்பர குடியிறுப்பை வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து அஞ்சானிபுத்ரா, சமக் ஆகிய கன்னட படங்களில் நடித்த இவர், கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். குறுகிய காலத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தெலுங்கில் டியர் காம்ரேட், சரிலேரு நீக்கெவரு, புஷ்பா சீதாராமம் உள்ளிட்ட பல படங்கள் கன்னடத்தில் பெரிய வெற்றியை பெற்றது. 2022-ம் ஆண்டு வெளியான குட்பாய் படத்தின் மூலம் இந்தியில் கால்பத்தித்த ராஷ்மிகா அடுத்து மிஷன் மஜ்னு என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான அனிமல் படத்தில் ரன்பீர் கபூருடன் நடித்திருந்த ராஷ்மிகா கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டார்.
சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா அடுத்து விஜயின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூடன் நடித்து வரும் நிலையில், சாவா, சிக்கந்தர், குபேரா உள்ளிட்ட பான் இந்தியா படங்களிலும் நடித்து வரும் ராஷ்மிகா, அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2 படத்தில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், டிசம்பர் 5-ந் தேதி புஷ்பா படத்தின் 2-ம் பாகம் புஷ்பா தி ரூல் படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனா சென்னையில் முகாமிட்டுள்ளதாகவும், பிரபல இயக்குனர் ஒருவரின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, மேலும் கோலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாகவும், இதற்காக சென்னையில் குடியேற முடிவு செய்துள்ள ராஷ்மிகா ஓ.எம்.ஆர்.சாலையில், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“