அப்பா கிரிக்கெட் வீரர், அம்மா முன்னணி நடிகை: வங்கியில் வேலை செய்த மகள் சினிமா நடிகை ஆனது எப்படி?

வங்கியில் வேலை செய்து வந்த பிரபல கிரிக்கெட் வீரரின் மகள் ஒருவர், ஒரு கட்டத்தில் சினிமா மீது வந்த ஆசையின் காரணமாக வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கி இன்று முன்னணி நடிகையாக இருக்கிறார்.

வங்கியில் வேலை செய்து வந்த பிரபல கிரிக்கெட் வீரரின் மகள் ஒருவர், ஒரு கட்டத்தில் சினிமா மீது வந்த ஆசையின் காரணமாக வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கி இன்று முன்னணி நடிகையாக இருக்கிறார்.

author-image
WebDesk
New Update
soha alikhan

இன்றைய காலக்கட்டத்தில் சினிமாவில நடிப்பது என்பது எளிதான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்வது என்பது பலருக்கும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. சமூகவலைதளங்களின் மூலம் சினிமா வாய்ப்பு பெற்ற பலரும் தற்போது மீண்டும், சினிமா வாய்ப்பு இல்லாமல் தங்கள் சமூக வலைதளங்களுக்கே திரும்பி செல்லும நிலையும் இருக்கிறது. ஆனாலும் சினிமா ஆசை என்பவது பலதரப்பட்ட மனிதர்களின் முக்கிய ஆசையாக இருக்கிறது.

Advertisment

இந்த சினிமா ஆசையில். பலரும் தங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு வாய்ப்பு தேடி அலைகின்றனர். குறிப்பாக, வேறு துறைகளில் பணியாற்றும் பலரும் சினிமாவில் நடிகர் நடிகைகளாக மாற வேண்டும் என்ற முயற்சியில், ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில், ரூ18000 சம்பளத்தில் வங்கியில் வேலை செய்து வந்த பிரபல கிரிக்கெட் வீரரின் மகள் ஒருவர், ஒரு கட்டத்தில் சினிமா மீது வந்த ஆசையின் காரணமாக வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கி இன்று முன்னணி நடிகையாக இருக்கிறார்.

அந்த நடிகை வேறு யாரும் இல்லை சோஹா அலி கான்தான். இந்திய கிரிக்கெட் அணிக்காக சில போட்டிகளில் விளையாடிய மன்சூர் அலிகான் பட்டோடியின் மகள் தான் இந்த சோஹா அலி கான். பாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையான ஷர்மிளா தாக்கூர் தன் மன்சூர் அலிகான் பட்டோடியின் மனைவி. இவர்களின் மகன் சையப் அலிகான் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவரது மனைவி கரீனா கபூர், மகள் சாரா அலிகான் ஆகிய இருவருமே பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் தான்.

குடும்பத்தில் அம்மா. சகோதரர் என இருவருமே சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்தாலும், சோஹா அலிகானக்கு சினிமா மீது ஆர்வம் இலலை. லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த சோஹா, பின்னர் மும்பைக்கு வந்து ஒரு சர்வதேச வங்கியில் ரூ18000 சம்பளத்திறகு பணியாற்றியுள்ளார். அதே சமயம், மும்பையில் அவர் வசித்த வீட்டின் வாடகை ரூ. 17,000. ஆனாலும் தனது சுதந்திரமான வாழ்க்கையை கருத்தில்கொண்ட அந்த வேலையை தொடர்ந்து செய்த வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டதால், சினிமா வாய்ப்புக்காக மாடலிங்க துறையில் களமிறங்கியுள்ளார்.

Advertisment
Advertisements

இதன் மூலம் அவருக்கு கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'தில் மாங்கே மோர்' (2004) படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில், ஷாஹித் கபூருக்கு ஜோடியாக சோஹா அலிகான் நடித்திருந்தார். இநத படத்திற்காக அவருக்கு ரூ10 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்பு குவிய தொடங்கிய நிலையில், 'பஹேலி' என்ற படத்தில் ஷருக்கானுடன் இணைந்து நடிக்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு ராணி முகர்ஜிக்கு சென்றுவிட்டது.

அதன்பிறகு பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிய சோஹா அலிகான், ரங் தே பசந்தி, அஹிஸ்தா அஹிஸ்தா, கோயா கோயா சந்த், மும்பை மேரி ஜான், 99, சாஹேப், பிவி அவுர் கேங்ஸ்டர் ரிட்டர்ன்ஸ் போன்ற வெற்றிப் படங்களில் அவர் நடித்திருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் குணால் கெமுவை திருமணம் செய்கொண்ட அவரக்கு ஒரு மகள் இருக்கிறார். கடைசியாக சோஹா அலிகான் சுருலி 2 என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். ஆங்கிலம், பெங்காலி உள்ளிட்ட மொழிளிலும் இவர் நடித்துள்ளது குறிபபிடத்தக்கது. 

Cinema Actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: