/indian-express-tamil/media/media_files/2025/08/20/sobam-kapoor-2025-08-20-19-26-02.jpg)
சினிமாவை பொறுத்தவரை கற்பனை கதைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு மிக அதிகம். உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், அதில் சுவாரஸ்மாக இருக்க வேண்டும் என்பதற்காக சில கற்பனையான காட்சிகளை சேர்ப்பது வழக்கம் தான். அந்த வகையில் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு படம், அதன் பட்ஜெட் விட 4 மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது. இந்த படம் வெளியாகி 12 ஆண்டுகள் கடந்திருந்தாலும், இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது.
அந்த படத்தின் பெயர் பாக் மில்கா பாக். ஃபர்ஹான் அக்தர் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான இந்த படத்தை, ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கியிருந்தார். புகழ்பெற்ற இந்திய ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ41 கோடி. இந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், ரூ. 210 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அந்த நேரத்தில் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.
வசூலில் மட்டுமல்லாமல், விருது பெறவதிலும் சாதனை படைத்த இந்தப் படம் 6 பிலிம்பேர் விருதுகளுடன் மொத்தம் 55 விருதுகளை வென்றுள்ளது. படத்தில் மில்கா சிங் கேரக்டரில் நடித்திருந்த, ஃபர்ஹான் அக்தர் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் படம் இரண்டு தேசிய விருதுகளையும் உலகளவில் மொத்தம் 14 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகளை வென்றது. ஒட்டுமொத்தமாக, இது இந்திய சினிமாவிற்கு நல்ல அங்கீகாரத்தைக் கொண்டு வந்தது.
இந்தப் படத்தில் பிரபல நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் 'பீரோ'ஒரு கேமியோ கேரக்டராக இருந்தாலும், அவரது நடிப்பு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் சோனம் இந்தப் படத்திற்கு 11 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றார். இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா கூறுகையில், “சோனம் கபூரும், ஃபர்ஹான் அக்தரும் எப்படியாவது இந்தப் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.11 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொண்டு சோனம் கபூர் இந்தப் படத்தில் நடித்தார். ஃபர்ஹான் அக்தரை பொறுத்தவரை தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று அவர் கேட்கவே இல்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.