தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 5-6 படங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த ஆண்டின், கடைசி வாரத்திற்கு முந்தைய வாரமான நாளை (டிசம்பர் 20) 4 படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது. அதிலும் விடுதலை 2 படம் மட்டுமே நேரடி தமிழ் படமாக வெளியாகியது.
2024-ம் ஆண்டு முடிவுக்கு வர இன்னும் 2 வாரங்களே உள்ளது. இதில் அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒரு சில படங்கள் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகியுள்ள விடுதலை 2 உட்பட 4 படங்கள் வெளியாக உள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் வெளியான டப்பிங் படம் ஒன்று வெளியாக உள்ளது.
விடுதலை 2
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான படம் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. தொடர்ந்து இந்த படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாராகியள்ளது. சூரி விஜய் சேதுபதி ஆகியோருடன், மஞ்சுவாரியார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் நாளை வெளியாக உள்ளது.
யு1
கன்னட சினிமாவின் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் உபேந்திரா இயக்கம் மற்றும் நடிப்பில் தயாராகியுள்ள படம் யு1. தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதிப்புகள் குறித்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கபட்டுள்ளது என்று இந்த படத்தின் டிரெய்லர் மூலம் தெரியவந்துள்ள நிலையில், இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
மார்கோ
மாலிகாபுரம் படத்தின் மூலம் கவனிக்கப்படும் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறியப்பட்ட நடிகர் உன்னிமுகுந்தன், சூரி நடித்த கருடன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது அவர் மார்கோ என்ற படத்தில் நடித்துள்ளார். நிவின்பாலி இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்த படமும் பான் இந்தியா படமாக நாளை வெளியாக உள்ளது.
முஃபாசா தி லைன் கிங்
ஹாலிவுட் விலங்குகள் பட வரிசயைில் அடுத்து வெளியாக உள்ள படம் முஃபாசா தி லைன் கிங். நாசர், அர்ஜூன் தாஸ், அசோக் செல்வன், ரோபோ சங்கர், வி.டிவி.கணேஷ், சிங்கம் புலி ஆகியோர் இந்த படத்திற்காக தமிழ் டப்பிங் குரல் கொடுத்துள்ளனர். இந்த படமும் நாளை தமிழில் வெளியாக உள்ளது.
இந்த 4 படங்களுமே அந்தந்த மொழிகளில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், தமிழில் விஜய் சேதுபதி வெற்றிமாறன் கூட்டணியில் தயாராகியுள்ள விடுதலை 2 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“