/indian-express-tamil/media/media_files/2025/03/19/5i85Hf2655Q0ycTf4DbN.jpg)
இன்றைய காலக்கட்டத்தில திரையரங்குகளில் வெளியாகும் படங்களை விட வாரந்தோறும் ஒடிடி தளங்களில் வெளியாகம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு வாரமும், ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களை பற்றி தெரிந்துகொள்ள, ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல் அவர்களை திருப்திபடுத்தும் வகையில், ஹட்ஸ்டமார், அமேசான், நெட்ஃபிளிக்ஸ், உள்ளிட்ட பல்வேறு ஒடிடி தளங்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ஃபயர்
வெளியீட்டு தேதி: மார்ச் 21, 2025
தளம்: டென்ட்கொட்டா
ஜே சதீஷ் குமார் இயக்கிய தமிழ் க்ரைம் த்ரில்லர் படமான ஃபயர், பிப்ரவரி 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ரூ.1.82 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படம் தற்போது டென்ட்கொட்டா ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தீவிரமான குற்ற விசாரணையை மையமாகக் கொண்ட ஃபயர், மலையாளம் உட்பட பல மொழிகளிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஃபீசர் ஆன் டூட்டி
வெளியீட்டு தேதி: மார்ச் 20, 2025
தளம்: நெட்ஃபிக்ஸ்
ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகது குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்த படம் ஆஃபீசர் ஆன் டூட்டி. இந்த ஆண்டு தொடக்கத்தில் கேரள திரையரங்குகளில் ஆசிப் அலியின் ரேகசித்ரம் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வசூல் சாதனையை முந்தி, பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாகதக்தை ஏற்படுத்தியது ஆஃபீசர் ஆன் டூட்டி. பிரமிக்க வைக்கும் சஸ்பென்ஸுடன் நிரம்பிய இந்தப் படம், தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்க வைத்தது. இந்த படம் தற்போது மார்ச் 20 முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. மலையாளம் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது.
ஜிதேந்தர் ரெட்டி
வெளியீட்டு தேதி: மார்ச் 20, 2025
தளம்: ஈ.டிவி வின்
விரிஞ்சி வர்மா இயக்கிய வாழ்க்கை வரலாற்று படமான ஜிதேந்தர் ரெட்டி, தெலுங்கானாவைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஆா.எஸ்.எஸ் தலைவரின் வாழ்க்கை மற்றும் மரபை பற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இந்த படம் பெரிய தாகக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அப்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் 2-வது வாய்ப்பாக, ஒடிடி தளத்தின் வெளியீட்டுக்காக தயாராகி வருகிறது. மார்ச் 20 முதல் ஈ.டிவி வின் ஒடிடி தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK)
வெளியீட்டு தேதி: மார்ச் 21, 2025 (தற்காலிக)
தளம்: பிரைம் வீடியோ
இயக்குனர் தனுஷ் இயக்கிய 3-வது படமாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK) படம், காதல், மனவேதனை மற்றும் இரண்டாவது வாய்ப்புகளின் சாத்தியக்கூறுகளை ஆராயும் ஒரு இதயப்பூர்வமான காதல் படமாக வெளியானது. அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட புதிய நடிகர்கள் குழு நடிக்கும் இந்தப் படம், எதிர்பாராத விதமாக ஒரு திருமணத்தில் சந்திக்கும் இரண்டு முன்னாள் காதலர்களின் நடவடிக்கைகள பற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம்மார்ச் 21 முதல் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்ய வாய்ப்புள்ளது.
இதுவரே
தளம்: அமேசான் பிரைம் வீடியோ
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இதுவரே படம் இறுதியாக ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அனில் தாமஸ் இயக்கிய இந்த உணர்ச்சிகரமான படத்தில், , கலாபவன் ஷாஜோன் மற்றும் லீதா சுனில் ஆகியோரின் சிறப்பான நடிப்பில் உருவாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, படம் இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கிறது, பார்வையாளர்கள் தங்கள் வீடுகளின் வசதியிலிருந்து அதன் இதயப்பூர்வமான கதைசொல்லலை அனுபவிக்க வாய்ப்பளிக்கிறது.
ட்ராகன்
வௌயீட்டு தேதி : மார்ச் 21
தளம்: நெட்ஃபிளிக்ஸ்
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த 3-வது திரைப்படமாக 'டிராகன்' பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. 'ஓ மை கடவுளே' புகழ் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இந்த படம் திரையரங்குகளில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியுள்ளது. இந்த படம் மார்ச் 21-ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.