காதல், லட்சியம், சீரியல் கில்லர்; இந்த வாரம் ஒடிடி தளத்தில் வெளியாகும் படங்கள்: உங்க பேவரெட் எந்த படம்?

மே 12 முதல் 18 வரை ஒடிடி தளங்களில் வெளியாகவுள்ள முக்கிய திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம்.

மே 12 முதல் 18 வரை ஒடிடி தளங்களில் வெளியாகவுள்ள முக்கிய திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Ott releaee May 2025

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை போல் ஒடிடி தளத்திலும் புதிய படங்கள் மற்றுமு் வெப் தொடர்கள் வெளியாகி வருகிறது. திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போலவே ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடி தளங்களில் பல சுவாரஸ்யமான திரைப்படங்களும், வெப் தொடர்களும் வெளியாகவுள்ளன. வீட்டில் இருந்தபடியே பார்த்து மகிழக்கூடிய சில முக்கியமான படங்கள் குறித்து பார்ப்போம்.

மரணமாஸ் (Maranamass) (SonyLIV, மே 15)

Advertisment

மலையாளத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி திரைப்படம், மரணமாஸ். கேரளாவில் ஒரு நகரத்தை பயமுறுத்தும் தொடர் கொலையாளியைப் பற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம், எதிர்பாராத திருப்பமாக, அந்த கொலையாளியும், அவர் கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் நபர், மற்றும் வேறு சில முக்கிய நபர்களும் ஒரு இரவு பேருந்தில் ஒன்றாக பயணிக்க நேரிடுகிறது. இது பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும்  நிகழ்வுக்கு வழிவகுக்கிறது. இந்த படத்தில் பாசில் ஜோசப், சிஜூ சன்னி,அனிஷ்மா, டவினோ தாமஸ், ராஜேஷ் மாதவன், மற்றும் பூஜா மோகன்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் ஏப்ரல் 10, 2025 அன்று வெளியானது.

போல் சுக் மாஃப் (Bhool Chuk Maaf) (Prime Video, மே 16)

இந்தி ரொமான்டிக் காமெடி திரைப்படமான போல் சுக் மாஃப்  பனாரஸைச் சேர்ந்த ஒரு சிறு நகரத்து பையன், தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்வதற்காக அரசு வேலை பெறுகிறான். ஆனால், அவன் சிவபெருமானுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விடுகிறான். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை அவன் ஒரு விசித்திரமான சுழலில் சிக்கிக் கொள்கிறான். இந்த படத்தில் ராஜ்குமார் ராவ், வாமிகா கப்பி, சஞ்சய் மிஸ்ரா, ரகுபீர் யாதவ், மற்றும் சீமா பாஹ்வா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதலில் திரையரங்குகளில் வெளியாகவிருந்த இப்படம், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

ஹாய் ஜூனூன்! (Hai Junoon!) (JioHotstar, மே 16)

இந்த வெப் தொடர், ஒரு பெரிய போட்டியில் ஒருவருக்கொருவர் போட்டியிடும் இரண்டு குழுக்களைப் பற்றியது. இசை மற்றும் நடனத்தை மையமாக கொண்ட இந்த தொடரில் ஜாக்குலின் பெர்ணான்டஸ், போமன் இரானி, நீல் நிதின் முகேஷ், சித்தார்த் நிகாம், யாக்டி தீரஜ், பிரியன் சர்மா, எலிசா மேயர்  மற்றும் சுமீத் முட்கல்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மும்பையின் புகழ்பெற்ற ஆண்டர்சன்ஸ் கல்லூரியின் பின்னணியில், கனவு, தைரியம் மற்றும் ஆதிக்கம் செலுத்துதல் ஆகியவற்றை மையமாக கொண்டு இந்த தொடர் உருவாகியுள்ளது.

டியர் ஹாங்ராங் (Dear Hongrang) (Netflix, மே 16)

Advertisment
Advertisements

இந்த தொடரின் கதை, தன் சகோதரனைத் தேடும் ஒரு பெண்ணைப் பற்றியது. அவளுடைய இந்த தேடல் அவளை சுய-கண்டுபிடிப்பு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. வழியில், அவள் தன் குடும்பத்தின் இருண்ட ரகசியங்களையும், அந்தப் பகுதியின் ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த தொடரில் லீ ஜாவோக், ஜோ போஹ், கிம் ஜோவாக், பார்க் பொயிங்கான் மற்றும் உம் ஜிவோம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஒரு மர்மமான காலகட்ட காதல் கதையாகும், இதில் ஜெ-யின் சகோதரனைத் தேடும் பயணம், காதல் மற்றும் சுய-கண்டுபிடிப்பின் பாதையாக விரிகிறது. ஜோசியன் காலத்தின் பின்னணியில் குடும்ப ரகசியங்களையும் ஆபத்துகளையும் அவள் சந்திக்கிறாள்.

OTT

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: