/indian-express-tamil/media/media_files/09xedXRVOn5TSZJyuA1c.jpg)
அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் லப்பர் பந்து. கனா, எப்.ஐ.ஆர் போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும், நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதியவருமான தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படம் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வதந்தி என்ற வெப் தொடரின் மூலம் பிரபலமான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த படத்தை பிரின்ஸ் பிச்சர்ஸ் தயாரித்துள்ளது. ரிலீஸ்க்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த லப்பர் பந்து திரைப்படம், கடந்த செப்டம்பர் 20-ந் தேதி வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அட்டகத்தி தினேஷ், நாயகியின் அப்பா கெத்து என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளதாக பலரும் பாராட்டி வருகினறனர்.
இந்த படத்திற்கு தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஹர்பஜன் சிங் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், தமிழில் பதிவிட்டுள்ள ஹர்பஜன், "என்னோட அடுத்த தமிழ் படக்குழு சொன்னாங்க "சார் லப்பர் பந்துனு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மாஅட்டகாசமா இருக்கு பாருங்கனு". கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா" என்று பதிவிட்டுள்ளார்.
என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க "சார் #lubberPandhu னு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு". கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா @Prince_Pictures@iamharishkalyan 👌@tamizh018🌟 #GethuDinesh🧨
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 27, 2024
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின் பல சாதனைகளை படைத்துள்ள அஸ்வின், இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்த நிலையில், அவரை தொடர்ந்து தற்போது ஹர்பஜன் சிங் பாராட்டக்களை தெரிவித்துள்ளார். ஹர்பஜன் ஏற்கனவே, 2021-ம் ஆண்டு வெளியான ப்ரண்ட்ஷிப் என்ற படத்தில் ஹர்பஜன் சிங் நாயகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.