Advertisment

தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகர் : மனம் திறந்த சூர்யகுமார் யாதவ் ; அந்த நடிகர் யார்?

சூர்யகுமார் யாதவ், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலககோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒரு வீரராக இணைந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Suryakumar Yadav IPL 2024 Return Date For Mumbai Indians Tamil News

சூர்யகுமார் யாதவ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருக்கும் சூர்யகுமார் யாதவ், தற்போது டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடமபெற்றுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் செல்வதற்கு முன்பாக அவர் அளித்த பேட்டியில் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் குறித்து பேசியுள்ளார்.

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியில் குறுகிய காலத்தில் அதிரடி ஆட்டக்காரராக உருவெடுத்தவர் சூர்யகுமார் யாதவ். தென்ஆப்பிரிக்க அணியின் டிவில்லியர்ஸ் போல் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிடும் திறன் படைத்த இவர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் ஸ்கை என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலககோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒரு வீரராக இணைந்துள்ளார். வரும் ஜூன் 2-ந் தேதி முதல் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சூர்யகுமார் யாதவ், தான் தமிழ் நடிகர் தளபதி விஜயின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார். விஜயின் ஆக்ஷன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தனது கல்லூரி நாட்களில் விஜய் படம் வெளியாகும்போது தியேட்டர்களில் சென்று பார்ப்பது எனது வழக்கமான செயல்களில் ஒன்று என்றும் சூர்யகுமார் யாதவ், கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணியுடன் தனது விமானப் பயணத்தின் போது தான் விஜயின் 'வாரிசு' படத்தைப் பார்த்தது குறித்து குறிப்பிட்டுள்ளார். விஜய் குறித்து அவரின் இந்த புகழாரம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் அவர் வைரலான வீடியோவில் படத்தின் கொண்டாட்டப் பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், இது டைம் ட்ராவல் ஃபேண்டஸி படம் என்று கூறப்படுகிறது.படத்திற்காக இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் விஜய் நடித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suryakumar Yadav Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment