உலகின் மிகப்பெரிய திரைப்பட துறை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு, வெற்றிகரமான மற்றும் திறமையான நடிகர்கள் பலர் உள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ் வசூலுடன், இந்த நடிகர்களின் சம்பள அளவுகளும் உயர்ந்துள்ளன. இதனால் அவர்கள் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் சிலராக உள்ளனர்.
அந்த வகையில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள்-நடிகைகள் குறித்து பார்க்கலாம்.
ஷாருக்கான்
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் கிட்டத்தட்ட 3 தசாப்தங்களாக ஹிந்தி திரையுலகை ஆண்டுவருகிறார். இவரின் நடிப்பில் வெளியான படங்கள் மெகா சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பதான் படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.
இந்நிலையில், ஷாருக்கான் ஒரு படத்தில் நடிக்க ரூ.50 கோடி செக் வாங்குகிறார். மேலும், படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கும் இவருக்கு வழங்கப்படுகிறது. ஆகையால் ஒரு படத்தில் ஷாருக்கான் கிட்டத்தட்ட 150 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார் என்று கூறப்படுகிறது.
பிரபாஸ்
இந்தப் பட்டியலில் உள்ள ஒரே தென்னிந்திய நடிகர் பிரபாஸ் ஆவார். ராஜ மௌலி இயக்கத்தில் இவரின் நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் பான் இந்தியா
இந்த இரண்டு பாகங்களும் கிட்டத்தட்ட 3500 கோடிக்கு மேல் வசூலில் சாதனைப் படைத்தன. இந்தப் படத்தின் வெற்றி மூலம் பிரபாஸ் தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி உள்ளார்.
சல்மான் கான்
மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சல்மான் கானுக்கு இந்திய சினிமாவில் அறிமுகம் தேவையில்லை. இவரும் ஒரு படத்துக்கு 75 கோடி முதல் 100 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
தீபிகா படுகோன்
இந்தப் பட்டியில் நடிகைகளில் தீபிகா படுகோன்
ஆலியா பட்
அழகுப் பதுமை ஆலியா பட் ஒரு படத்தில் நடிக்க ரூ.20 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். ஆலியா பட் அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தில் சீதாதேவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தின் நாட்டு நாட்டு பாடல் அண்மையில் ஆஸ்கார் விருதை வென்றது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“