சின்னத்திரையில் நகைச்சுவை கலைஞராக அறிமுகமாகி பின்பு, சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் ரோபோ சங்கர்.
ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற ஒரே மகள் இருக்கிறார். இவரும் சினிமாவில் முத்திரை பதித்துள்ளார். நடிகர் விஜய் உடன் பிகில் படத்தில் பாண்டியம்மா கேரக்டரில் நடுத்துள்ள இந்திரஜா முதல் படத்திலேயே கவனம் பெற்றார். ஆனால், இந்திரஜா சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை.
இந்நிலையில், இந்திரஜாவிற்கு அவருடைய மாமாவான கார்த்திக்குடன் திருமணம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்கள் திருமணம் பலரையும் வியக்க வைத்தது. இந்த திருமணத்தில் பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்திரஜா திருமணத்திற்கு பிறகு, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இந்திரஜா தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார். இந்த நிகழ்ச்சியின் புரொமோ வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் இந்திரஜாவுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்தி உடன் தன் சொந்த ஊரான மதுரைக்கு காரில் சென்றார்.
இந்திரஜா மதுரைக்கு செல்லும்போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.
மேலும், இந்திரஜா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஆமாம் நாங்கள் இருவரும் அப்பா அம்மாவாக மாறுகிறோம். இந்த பயணம் முழுவதும் உங்கள் அனைவரின் பிரார்த்தனையில் எங்களை வைத்திருங்கள். இப்போது உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டு விடாதீர்கள் எனவும் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும், என்னுடன் எப்போதும் இருப்பதற்கு நன்றி” எனவும் கூறியுள்ளார்.
இந்திரஜா - கார்த்தி அப்பா அம்மாவாகப் போகிறார்கள், அதோடு, இந்திரஜாவின் தந்தை நடிகர் ரோபோ சங்கர் தாத்தாவாகப் போகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“