ரோபோ சங்கர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அவரது மருமகன், தனது மாமியாரான ரோபோ சங்கர் மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததும், இந்திரஜா தனது அப்படி ரோபோ சங்கருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திரஜா தற்போது இதற்கு விளக்கம் அளத்துள்ளார்.
மெமிக்ரி கலைஞராக இருந்து தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரோபோ சங்கர். டிவி. நிகழ்ச்சிகளில், சிவாஜி கணேசன், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் மாதிரி மெமிக்ரி செய்து அசத்திய இவர், ஆறாது சினம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சிங்கம் 3, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரியங்கா என்ற பெண்ணை மணந்துகொண்ட ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற ஒரு மகள் இருக்கிறார்.
விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்த இந்திரஜா, அடுத்து விருமன் படத்தில் நாயகியின் தோழியாக சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த மாதம் 24-ந் தேதி இந்திரஜாவுக்கு ரோபோ சங்கரின் மனைவி உறவுமுறையில் தம்பியான கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் அறந்தாகி நிஷா, மற்றும் நடிகர் சூரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன் பிறகு சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியில் ரோபோ சங்கரின் மருமகன் பாடலுக்கு நடனம் ஆடும்போது ரோபோ சங்கரின் மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் திருமண வரவேற்பில் மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுப்பார்களா என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
அதேபோல் இந்திரஜா தனது அப்பா ரோபோ சங்கருக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது குறித்து இந்திரஜா விளக்கம் அளித்துள்ளார். இதில், என் அப்பாவுக்கு முத்தம் கொடுத்த போட்டோவை பார்த்த பலர் என்னை விமர்சித்தனர். நான் பிறந்ததில் இருந்தே என் அப்பாவுக்கு இப்படித்தான் முத்தம் கொடுத்து விளையாடி வருகிறேன். இப்போது வளர்ந்துவிட்டால் நான் மகள் இல்லை என்று ஆகிவிடுமா?
முத்தம் கொடுப்பதில் தவறில்லை. அதை தப்பான கண்டோட்டத்தில் பார்ப்பவர்கள் தான் பிரச்சனை. உங்களை உங்கள் அப்பா அம்மா வளர்த்திருக்கிறார்கள். நான் தப்பான இல்லை. என் அப்பா என்னை சரியாத்தான வளர்த்திருக்கிறார் என்று கூறியுள்ளார். இந்திரஜாவின் இந்த விளக்கம், இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“