ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Advertisment
விஜய் டிவி தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ரோபோ ஷங்கர். இதைத்தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் காமெடியனாக நடித்துள்ளார். இரும்புத்திரை, விஸ்வாசம், மாரி, மிஸ்டர் லோக்கல் படத்தில் இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். இவர் பிகில், விருமன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூகவலைதளத்தில் எப்போதும் பதிவுகளை பகிர்ந்து வருவார். அம்மாவுடன் ரீஸ் போடுவது மற்றும் முறை மாமன் கார்த்திக்குடன் வீடியோ பதிவு செய்வார்.
Advertisment
Advertisements
இந்நிலையில் இந்திரஜா மற்றும் அவரது குடும்பத்தினர் குலதெய்வ கோயிலுக்கு சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் அவரது முறைமாமன் கார்த்திக் உடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு கிழே ரசிகர்கள் “ இவருடன் அடிக்கடி புகைப்படம் பகிர்ந்துகொள்கிறீர்கள். இவரைத்தான் திருமணம் செய்வீர்களா? என்று அனைவரும் கேட்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த இந்திரஜா, “ கூடியவிரைவில் கல்யாணம் செய்துகொள்வோம். ஆனால் தேதி பின்னர் முடிவு செய்யப்படும். எனது சந்தோஷத்தை ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் கண்டிப்பாக பகிர்ந்துகொள்வேன்” என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil