களைகட்டிய கல்யாண பார்ட்டி: கணவர் ரொமான்டிக் சாங்… வெட்கப்பட்ட ஹன்சிகா!

டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஹன்சிகா மோத்வானி, சோஹைல் கதுரியா திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு பிறகு ஹன்சிகா-கதுரியா ஜோடி விருந்து அளித்தனர்.

Inside Hansika Motwanis wedding after-party
டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஹன்சிகா மோத்வானி, சோஹைல் கதுரியா திருமணம் நடந்தது.

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்டகால நண்பரான சோஹேல் கதுரியாவை டிசம்பர் 4, ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஜோடி இன்னும் விழாவின் புகைப்படங்களைப் பகிரவில்லை என்றாலும், அவர்களின் ரசிகர் பக்கங்கள் திருமணத்தின் சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் நிரம்பி வழிகின்றன.

ஒரு வீடியோ கிளிப்பில், தளபதி விஜய்யின் ஹிட் நடன பாடலான “வாத்தி கம்மிங்” பாடல் ஒளிபரப்பப்பட்டது. இந்த ஜோடி தம்பதியராக மாறுவதற்கு முன்பு சிறிது காலம் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஹன்சிகா, நவம்பர் 2ஆம் தேதியன்று, ஈபிள் டவர் முன் சோஹேல் தனக்கு காதலை சொல்லும் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவிற்கு ஹன்சிகா “நவ் அண்ட் ஃபாரவர் (Now and forever- எப்போதும்)” எனத் தலைப்பிட்டிருந்தார்.

டிசம்பர் 4 ஆம் தேதி திருமண முடிச்சுப் போடுவதற்கு முன், இந்த ஜோடி ஒரு சங்கீத இரவு, ஒரு சூஃபி இன்னிசை இரவு மற்றும் ஹால்டி விழாவையும் கண்டது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

திருமண விருந்தின்போது, காதல் கணவர் சோஹேல் தனது மனைவி ஹன்சிகாவை பார்த்து, ரொமான்டிக் ஆக ‘கேசரியா’ பாடலை பாடினார். இதைப் பார்த்த ஹன்சிகா நாணத்தால் சிவந்தார். இந்த வீடியோ ஆன்லைனில் பரவலாகப் பரவி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Inside hansika motwanis wedding after party

Exit mobile version