/indian-express-tamil/media/media_files/2025/07/16/rakul-preet-singh-2025-07-16-15-46-40.jpg)
பளிங்கு கற்கள், ஓவியங்களால் நிரம்பிய சுவர்கள்; வீட்டுக்குள் பார் வசதி; ரகுல் ப்ரீத் சிங் ஹோம் டூர்!
மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ள பூஜா காசா கட்டிடத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்-ஜாக்கி பாக்னானி வசித்து வருகின்றனர். இவர்களது ஆடம்பரமான வீடு சமீபத்தில் திரைப்பட இயக்குநர் ஃபரா கான் அவர்களின் விருந்தினர் வருகையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வீடு அதன் பிரம்மாண்டமான வடிவமைப்பு மற்றும் வசதிகளுக்காக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வீட்டின் சிறப்பம்சங்கள்:
அகலமான வாழ்க்கை அறை: வீட்டிற்குள் நுழைந்தவுடன் கண்கவர் விதமாகப் பெரிய வாழ்க்கை அறை உள்ளது. இதில் பல்வேறு வகையான பொருட்களால் செய்யப்பட்ட சோஃபாக்கள் வைக்கப்பட்டுள்ளன. மும்பை போன்ற பெருநகரங்களில் காண்பது அரிதான, இந்த வீட்டின் உயரமான கூரை தனித்துவமான சிறப்பம்சம். சலவைக் கல் மற்றும் மர தளவாடங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த வீட்டில், ஜாக்கியின் தாய் பூஜா பாக்னானி சேகரித்த பல ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பிரம்மாண்டமான சமையலறை: ஃபரா கானின் வீட்டிலுள்ள ஹாலுக்கு சமமான அளவில் பெரிய தீவு சமையலறை இங்குள்ளது. இதில் 2 பெரிய குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் 4 மைக்ரோவேவ் ஓவன்கள் உள்ளன. இது வீட்டின் ஆடம்பரத்திற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
நீச்சல் குளங்கள்: ரகுல் மற்றும் ஜாக்கியின் குடியிருப்பில் முதலில் இரண்டு நீச்சல் குளங்கள் இருந்தன. ஆனால், அவற்றைப் பராமரிப்பது கடினம் என்பதால், ஒரு குளத்தை வெளிப்புற இருக்கை பகுதியாகவும், செடிகள் நிறைந்த தோட்டமாகவும் மாற்றியுள்ளனர். மற்றொன்று நகரக் காட்சியுடன் கூடிய நீச்சல் குளமாக உள்ளது. இது விருந்துகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஏற்ற இடமாக விளங்குகிறது.
டென் (Den) தனி அறை: இந்த அறையில் பார் உள்ளது. ஜாக்கி தனிமையில் இருந்தபோது இங்கு பல விருந்துகள் நடத்தியுள்ளார். திருமணத்திற்கு பிறகு ரகுல் இந்த அறையை ஒரு குடும்ப அறையாக மாற்றியுள்ளார். பெரிய ஜன்னல்கள் வழியாக நகர காட்சியைப் பார்க்கக்கூடிய வசதியான, சொகுசு லெதர் சோஃபாக்கள் இந்த அறையை மேலும் அழகாக்குகின்றன.
ரகுல் மற்றும் ஜாக்கி வசிக்கும் பூஜா காசா கட்டிடத்தில், ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்காலிகமாக குடியேறியுள்ளனர் என்பது சுவாரஸ்யமான தகவல்.
ஷாருக்கானின் "மன்னாத்" பங்களா புதுப்பிக்கப்பட்டுவருவதால், அவர் இந்த கட்டிடத்தில் 2 டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகளை மாதத்திற்கு சுமார் ரூ.25.15 லட்சம் வாடகையில், 2 முதல் 3 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளார். பாக்னானி குடும்பம் இந்தக் கட்டிடத்தின் பல தளங்களை சொந்தமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.