இன்ஸ்பெக்டர் ரிஷி இந்த ஆண்டு மார்ச் 29-ல் அமேசான் பிரைம் ஒ.டி.டி தளத்தில் வெளியான ஹாரர் த்ரில்லர் வெப் சீரிஸ். இது மிக அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட வெப் சிரீஸ் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
ஒரு புதிய திரைப்படம் திரையரங்களில் ரிலீஸ் ஆகும்போது பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் மற்றும் பார்வையாளர்களைக் கணக்கிடுவதைப் போல, ஓ.டி.டி தளங்களில் புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகும்போது எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்று கண்டறியப்படுகிறது. ஓ.டி.டி தளங்கள், பெரிய அளவில் பிரபலமில்லாத நடிகர்கள் நடிப்பில், நல்ல கதையம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்களுக்கும் நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
துப்பறியும் கதை, திகில், ஹாரர், விறுவிறுப்பான படங்களைப் பார்ப்பதில் நீங்கள் ஆர்வமானவர் என்றால், இப்போது பலராலும் கவரப்பட்டு மிக அதிக அளவில் பார்க்கப்படும் இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் சீரிஸ் உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும்.
இந்த ஆண்டு மார்ச் 29ல் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி ஒரு ஹாரர் த்ரில்லர் வெப் சீரிஸ் ஆகும். அமேசான் பிரைம் வீடியோவுக்காக ஜே.எஸ். நந்தினி எழுதி இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் நவீன் சந்திரா, சுனைனா யெல்லா, கண்ணா ரவி, குமரவேல், மீஷா கோஷல், செம்மலர் அன்னம், கஜராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திகில் கலந்த திரில்லர் வெப் சீரிஸான இன்ஸ்பெண்டர் ரிஷி தமிழில் உருவாகி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் 10 எபிசோடுகள் உள்ளன. இது வெப் சீரிஸின் கதை இன்ஸ்பெக்டர் ரிஷியைச் சுற்றி நடக்கிறது. நவீன் சந்திரா மற்றும் சுனைனா கேத்ரின் "கேத்தி" ஷோபனாவாக நடித்துள்ளனர். கோயம்புத்தூர் அருகே வனப்பகுதியில் தொடர் கொலைகள் நடக்கின்றன. வனராச்சி என்ற கண்ணுக்குத் தெரியாத சக்தி இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பதாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். இந்த கொலைகளை பற்றி விசாரிக்க இன்ஸ்பெக்டர் ரிஷி நியமிக்கப்படுகிறார். வனத்துறையும் போலீஸ் குழுவிற்கு ஆதரவை வழங்குகிறது. அதே நேரத்தில், இன்ஸ்பெக்டர் ரிஷி தனது தனிப்பட்ட வாழ்க்கை, ஒரு கண்ணில் பார்வை இழப்பு மற்றும் அவரது காதலியைக் காப்பாற்றத் தவறியது போன்றவற்றையும் காட்சிப்படுத்தப்படுகிறது.
இன்ஸ்பெக்டர் ரிஷி பார்வையாளர்களின் இதயங்களை வென்ற தமிழ் தொடர்களில் அதிகம் பார்க்கப்பட்டது என்ற பெயரைப் பெற்றுள்ளது. முன்பு இதை வெப் சீரிஸின் தயாரிப்பாளர்கள் எக்ஸ் பக்கத்தில் அறிவித்தனர். மேலும், “இங்கு எந்த மர்மமும் இல்லை, இன்ஸ்பெக்டர். எங்கள் கைகளில் அதியசம் நிகழ்ந்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“