காந்தாரா படத்தில் வெளியான வராக ரூபம் பாடலுக்கு கோழிக்கோடு மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காந்தாரா. இந்தப் படம் இன்றளவும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இந்தப் படத்தில் வராக ரூபம் என்ற சமஸ்கிருத பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடல் காப்பிடியக்கப்பட்டுள்ளதாக தாய்குடம் பிரிட்ஸ் பேண்ட்
குழுவினர் கோழிக்கோடு மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வராக ரூபம் பாடலை, ஒடிடி பிளாட்பார்ம், இசை சேனல்கள், இணையதளம், வலையொளி (யூ ட்யூப்) உள்ளிட்ட தளங்களில் வெளியிடக் கூடாது என உத்தரவிட்டார்.
காந்தாரா செப்.30ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான நிலையில் இன்றுவரை ரூ.220கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி நடித்துள்ளார்.
இந்த நிலையில் காந்தாரா படம், அமேசான் பிரைமில் நவம்பர் மாதம் வெளியாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil