IARA 2018, Tamil Actor Vijay Wins Best International Award for 'Mersal': தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்திற்கு சர்வதேச விருது அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ட்விட்டர் மற்றும் சமூகவலைத்தளங்களில் ஹாட்டர்ஸ் குழு கிளம்பியுள்ளது. விஜய்க்கு சர்வதேச விருது அளித்தது தகுதியானது இல்லை என்று விஜய் ஹாட்டர்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் செய்தியை பரப்பி வருகின்றன.
தளபதி விஜய் நடிப்பில் 3 வேடங்களில் நடித்து கடந்த வருடம் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்தின் புகழ் தற்போது வரை ஓயவில்ல.
பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே உலகம் முழுவதும் இத்திரைபடம் வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்தது.இப்படத்தில் இடம்பெற்ற பாடலாசிரியர் விவேக் எழுதிய “ஆளப்போறான் தமிழன்” பாடல் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில், ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால், ‘மெர்சல்’ படத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை நீக்கும்படி போராட்டங்களும் நடத்தினர். ‘மெர்சல்’ படத்துக்கு இந்த எதிர்ப்பு மூலம் இலவச விளம்பரம் கிடைத்தது. எனவே, படத்தின் வசூலும் அதிகமானது.
விஜய்க்கு சர்வதேச விருது :
திரைப்படம் வெளியான முதல் நாளே ரசிகர்களை படத்தை தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். அன்றிலிருந்து இன்று வரை விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் திரைப்படம் ‘எவர் டை ஃபேவரெட்’ படமாக அமைந்து விட்டது.உலகளவில் ஈர்த்ததால் உலக திரைப்பட விழாக்களில் ‘மெர்சல்’ படம் திரையிடப்பட்டு வருகின்றது. வரும் செப்டம்பர் 22ம் தேதி லண்டனில் நடைப்பெற உள்ள ஐஏஆர்ஏ விருதுக்கு மெர்சல் படம் பரிந்துரைக்கப்பட்டதால், அதில் நடித்த விஜய்யின் பெயர் ஹாலிவுட் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்று அசத்தினார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை இந்த விருதுக்கான வெற்றி பெற்றோர் பட்டியல் வெளியானது. இதில் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த செய்தி வெளியான நாள் முதல் ரசிகர்கள் வெடி வைத்து கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் விஜய்க்கு சர்வதேச விருது அளித்தது தகுதியானது இல்லை என்று விஜய் ஹாட்டர்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் செய்தியை பரப்பி வருகின்றன.
சர்வதேச விருதுகளும் டாக்டர் பட்டம் போலத் தான் என்று விமர்சித்துள்ளனர். இந்த விருதை விஜய் நேரடியாக சென்று வாங்குவாரா என்ற தகவலும் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.