Advertisment

’லெஜண்ட்’ பட நடிகை ஊர்வசியின் பாத்ரூம் வீடியோ லீக்; ’பப்ளிசிட்டி ஸ்டண்ட்’ – நெட்டிசன்கள் விமர்சனம்

ஊர்வசி ரவுட்டேலாவின் வைரலான குளியலறை வீடியோ விளம்பரம் என இணையத்தில் விவாதம் நடந்து வரும் நிலையில், மற்றொரு கிளிப் ‘லீக்’ ஆனது: ‘இந்த விஷயங்கள் எப்படி வெளிவருகின்றன?’

author-image
WebDesk
New Update
urvashi rautela

நடிகை ஊர்வசி ரவுடேலா (புகைப்படம் - இன்ஸ்டாகிராம்)

புதன்கிழமை, லெஜண்ட் பட நடிகை ஊர்வசி ரவுடேலாவின் அந்தரங்க வீடியோ இணையத்தில் கசிந்ததாகத் தெரிகிறது. வீடியோவில், நடிகை ஊர்வசி ரவுடேலா குளியலறை போன்ற தோற்றத்தில் தனது ஆடைகளை மாற்றுவதைக் காணலாம். இந்த வீடியோ பல புருவங்களை உயர்த்திய நிலையில், அது இணையத்திலும் சர்ச்சையை கிளப்பியது. சமூக ஊடக பயனர்களில் ஒரு பிரிவினர் நடிகைக்கு அனுதாபம் தெரிவித்து வருகின்றனர், மற்றவர்கள் இதை நடிகை மற்றும் அவரது குழுவினரின் விளம்பரம்/பி.ஆர் ஸ்டண்ட் (பப்ளிசிட்டி ஸ்டண்ட்) என்று அழைக்கின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் சில விவாதங்களைத் தூண்டிய நிலையில், நடிகை ஊர்வசி ரவுடேலா தனது மேலாளருடன் பேசிய உரையாடலும் இப்போது இணையத்தில் கசிந்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

பதிவுசெய்யப்பட்ட உரையாடல் பல்வேறு பாப்பராசி கணக்குகளில் பகிரப்பட்டது, இது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்ற கூற்றுகளை மேலும் வலுப்படுத்துகிறது. கசிந்த உரையாடலின் படி, ஊர்வசி தனது மேலாளரிடம் வீடியோவைப் பார்த்தீர்களா என்று கேட்கிறார். பதிலுக்கு, அவர் கூறுகிறார், "ஆம், நான் பார்த்தேன், குழு அதை இணையத்தில் இருந்து அகற்ற முயற்சிக்கிறது." என்றார். நடிகை மேலும் கூறுகையில், “இந்த விஷயங்கள் எப்படி நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. நான் உடனடியாக அவர்களை அழைக்க வேண்டும்." என்றார். இதற்கு மேலாளர் பதிலளித்தார், “ஆம், ஊர்வசி எனக்கு தெரியும், இது மிகவும் சோகமான சூழ்நிலை, ஆனால் தொலைபேசியில் பேச வேண்டாம். இதை நிறுத்தி வைத்து, ஜூலை 19 ஆம் தேதி நீங்கள் திரும்பி வரும்போது விவாதிக்கலாம் என்கிறார். “ஏன்?” என்று ஊர்வசி கேட்க, மேலாளர் மேலும் கூறுகிறார், “என்ன நடக்கிறது என்பது பற்றி யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை, நீங்கள் வந்ததும் நான் உங்களிடம் நேரில் பேசுவேன் என்கிறார்.

இந்த கசிந்த உரையாடலுக்கு எதிர்வினையாற்றிய ஒரு பயனர், "நீங்கள் மழலையர் பள்ளியிலிருந்து பி.ஆர் குழுவை பணியமர்த்தும்போது," என்று எழுதினார். மற்றொரு பயனர், "போலி மார்கெட்டிங், மோசமான யோசனைகள்..." என்று பதிவிட்டார். மூன்றாவது பயனர், "வரவிருக்கும் திரைப்படத்திற்கான விளம்பரம்" என்று கருத்து தெரிவித்தார். மற்றொரு பயனரும், "ஊர்வசியின் ரசிகர் அல்ல, ஆனால் அவரது குரல் AI மூலம் ஒலிக்கிறது" என்று சுட்டிக்காட்டினார். பயனர்களில் ஒருவர், "மற்றொரு மலிவான விளம்பரம்...அவரது PR குழுவிடமிருந்து புதிதாக எதுவும் இல்லை" என்றும் கூறினார்.

கசிந்த வீடியோ ஊர்வசியின் வரவிருக்கும் திரைப்படத்திற்கான விளம்பரத்தின் ஒரு பகுதியாகும் என்று பலர் நம்பினாலும், நடிகையால் மட்டுமே இந்த பிரச்சினை குறித்து விரிவாக தெளிவுபடுத்த முடியும். 

வால்டேர் வீரய்யா மற்றும் ஹேட் ஸ்டோரி 4 போன்ற படங்களில் ஊர்வசி நடித்துள்ளார். அடுத்து, அவருக்கு JNU: ஜஹாங்கிர் நேஷனல் யுனிவர்சிட்டி, டாக்டர். எஸ் - தி லெஜண்ட், மற்றும் நாட் யுவர் பேபி போன்ற படங்கள் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Urvashi Rautela
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment