‘தள்ளிப் போகாதே’ பாடகர் சித் ஸ்ரீராமிடம் ஒரு சந்திப்பு…!

‘தள்ளிப் போகாதே’ பாடலை நாம் ஒரு குறிப்பிட்ட பிரிவில் வகைப்படுத்த முடியாது. மேதைத் தன்மையுடன் அப்பாடல் கம்போஸிங் செய்யப்பட்டிருக்கும்.

‘மறுவார்த்தை’ பாடல் மிகச் சிறப்பாக உள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவும் அதனை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த ஒரு பாடலோடு சித் ஸ்ரீராமின் எல்லையை வரையறுக்க முடியாது. உங்களது மற்ற பணிகள் குறித்து  அறியாத பார்வையாளர்களிடம், உங்கள் எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள்?

நான் ஒருசில இசை/கிரியேட்டிவ் ஸ்ட்ரீம்களை இயக்கி வருகிறேன். கர்னாடிக் இசை தான் எனது அடிப்படையாகும். ‘அடியே’ பாடல் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் சார் தான் சினிமாவில் எனக்கு ஒரு முதல் திருப்புமுனையை கொடுத்தார். அப்போது முதல் அவரது நம்பிக்கையை தாழ்மையுடன் நான் நிறைவேற்றி வருகிறேன். படங்களில் பாடல்களுக்கு பாடுவது என்பது ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாகும். நான் தனியாக எனது சொந்த பாடல்களை வெளியிட்டு வருகிறேன். அதுவும், ஆங்கிலத்தில் கடந்த 7 வருடங்களாக வெளியிட்டு வருகிறேன். இந்த இசை ஆன்மாவில் அடங்கியுள்ளது. புதிய அடியன்ஸிடம், எப்போதும் புதிய இசைகளை கொடுக்கும் முழுமையான இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

உங்கள் இசைப்பயணம் கர்னாடிக், கிளாசிக் பக்கம் இருந்தது. இப்போது R & B பக்கம் மாறியுள்ளது. இதுகுறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.

நான் என்னுடைய 3 வயதில் கர்னாடிக் இசையை, எனது அம்மா மற்றும் குருவான லதா ஸ்ரீராமிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அப்போதிலிருந்து, நான் கர்னாடிக் இசையில் ஒரு அழகான பயணத்தை அனுபவித்து வருகிறேன். இந்த உயர்தர இசைதான் எனக்குள் ஆழமாக ஊடுருவி, குரல் நுட்பங்களையும், மெலோடிகளின் புரிந்து கொள்ளும் தன்மையையும், அதனை மேம்படுத்திக் கொள்ளும் திறனையும் எனக்குள் ஏற்படுத்தியது. எனது 10-11 வயது காலக்கட்டத்தில் தான் R&B/ஆன்மா இசைகளை கேட்க ஆரம்பித்து, எனக்குள் அதனை போதனை செய்து கொண்டேன். உண்மையில் இந்த இரு வகையான இசையையும் சிறு வயதிலேயே நான் கேட்டு வளர்ந்தது, உண்மையில் நான் செய்த பாக்கியம் தான். இதற்கு பின், நான் வளர்ந்து ஒரு முறையான பாடகரான பின்னர், இந்த அனுபவம் எனக்கு இசையை அணுகுவதில் மிகுந்த உதவியாக இருந்தது.

‘பெர்க்லே’ என்பது இப்போது இந்தியாவில் மிகப்பெரிய பெயர். அவர்களிடம் நிறைய இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். நீங்கள் அங்கு மாணவனாக படித்த சில நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா?

‘இசைத் தயாரிப்பு மற்றும் பொறியியல்’ பிரிவில் தான் அங்கு படித்தேன். 2008-ல் அங்கு சேர்ந்த நான், 2012-ல் எனது படிப்பினை நிறைவு செய்தேன். நான் என்னமாதிரியான ஒரு கலைஞனாக ஆக வேண்டும் என நினைத்தேனோ, அந்தக் கனவினை என் கண் முன்னே அங்கே பார்த்தேன். ஆனால், அதற்கு முன்னரே, என்னிடம் தனித்துவமான குரல் உள்ளதை நான் அறிவேன். ஆனால், எங்கிருந்து அதனை தொடங்குவது என்பதில் எனக்கு தெளிவில்லை. ஆனால், பெர்க்லேவில் நான் மிகப்பெரிய பாடகர்கள் மற்றும் பேராசிரியர்கள் சூழ இருந்ததால், கலை வசதிகள் குறித்த பல விஷயங்களை நேரடியாக அணுகி தெரிந்து கொண்டேன். என் படைப்பு ஆர்வத்துடன் எனது கற்றலில் இருந்த இந்த அனைத்து விஷயங்களும் என்னை சிறப்பாக செதுக்கின.

உங்களுடைய சமீபத்திய வேலையைப் பற்றி சொல்லுங்கள், இன்சோம்னியேக் சீசன்.

டிஜே காளில், எனும் கிராமி விருது வென்ற தயாரிப்பாளருடன், லாஸ் ஏஞ்சல்ஸில் மூன்று வருடங்களுக்கு முன்பே இன்சோம்னியேக் சீசனை தொடங்கிவிட்டேன். இது தான் என்னுடைய முதல் முழுநீள ஆல்பமாகும். நான் ஒரு சரியான பாடகர் மற்றும் பாடலாசிரியர் என்பதை இது வெளிப்படுத்தும். இந்த ஆல்பம் ஆர்&பி, அனைத்து கர்னாடிக் பாதைகளை மற்றும் எனது அனைத்து கற்றலையும் ஒருசேர வெளிக்கொணரும்.

சினிமாப் பாடல்களை பொறுத்தவரை, எந்த வகையான பாடல்களில் நீங்கள் நெருக்கமாக உணர்கிறீர்கள்? வெவ்வேறு இசையமைப்பாளர்களுக்கு நீங்கள் பாடிய பாடல்களில், ஏதேனும் ஒன்றை எடுத்துக்காட்டாய் கூற முடியுமா?

பல வகையான பாடல்களை பாடியதற்காக, நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று நினைக்கிறேன். அதில், ‘அடியே’ பாடல் முக்கியமான ஒன்று. ‘என்னோடு நீ இருந்தால்’ ஒரு பெரிய பாப்-ஆந்தம் உணர்வைக் கொடுக்கும். ‘தள்ளிப் போகாதே’ பாடலை நாம் ஒரு குறிப்பிட்ட பிரிவில் வகைப்படுத்த முடியாது. மேதைத் தன்மையுடன் அப்பாடல் கம்போஸிங் செய்யப்பட்டிருக்கும். ‘என்னை மாற்றும் காதலே’ பாடல் காதலர்களின் தேசிய கீதமாகும். ‘மறுவார்த்தை’ பாடல் அழுத்தமான கர்னாடிக் சார்பு கொண்டு உருவாக்கப்பட்டது. ‘ஆகாயம் தாயாக’ (அஷ்வின் விநாயகமூர்த்தி) மற்றும் வெரட்டாம வெரட்டுறியே (லியோன் ஜேம்ஸ்) ஆகிய பாடல்கள், அற்புதமான மெலடிகளாகும். நான் பாடிய அனைத்து பாடல்களும், உணர்ச்சிப் பூர்வமான, ஆத்மார்த்தமான பாடல்களாகும்.

ரேப்பிட் வகை கேள்விகள்:

உங்களின் பிடித்தமான ராகம் எது?
இப்போதைக்கு கம்போஜி

இந்த ராகத்தில் வெளிவந்த சினிமா பாடல் ஒன்று சொல்லுங்கள்
தெரியாது.

உங்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் யார்?
ஏஆர்ஆர் சார்

அவரிடம் பாடுவதற்கு முன்பு, அவரது இசையில் பாட வேண்டும் என்று கனவு கண்டதுண்டா?
ஆம்! என் சிறுவயது முதல் அவரது இசையில் பாட வேண்டுமென்று கனவு கண்டுள்ளேன்.

ஒரு இசையமைப்பாளருக்காக நீங்கள் பாடிய முதல் பாடல் எது? (ரெக்கார்டிங் தியேட்டரில் இல்லாமல், தேர்வுக் கூடம் அல்லது மேடையில்)

“டாக் டு மி’ எனும் ஒரிஜினல் பாடல் அது.

இந்திய சினிமாவில் உங்களுக்கு பிடித்தமான பெண் பாடகர் யார்?

கே எஸ் சித்ரா

உங்கள் பாடல்களைத் தவிர்த்து, நீங்கள் அதிகம் முணுமுணுத்த பாடல் எது?

‘ரோஜா’ படத்தின் ‘புது வெள்ளை மழை’ பாடல்

ஒரு பெண்ணுக்கு நீங்க புரபோஸ் செய்ய விரும்பினால், உங்களது எந்த பாடலை நீங்கள் பாடுவீர்கள்?

தள்ளிப்போகாதே

பிடித்த ‘பாத்ரூம்’ பாடல் உண்டா?

எப்போதாவது முணுமுணுப்பேன்

இப்போது எந்த வகைப் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?

பழம்பெரும் கே வி நாராயண ஸ்வாமி அவர்களின் பேரின்பமான கம்போஜி ராக ஆலப்பன.

 

மொழிப்பெயர்ப்பு – அன்பரசன்

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Interview with musician sid sriram

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com