Superstar Rajini Darbar: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தர்பார் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் நடிகர் ரஜினி.
உங்களை ஒரு செகண்ட் வியக்க வைக்கும் நிகழ்வுகள் இதில் ஏராளம் உள்ளன.
25 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து ’செகண்ட் டைம்’ பொங்கலுக்கு ரஜினியின் படம் வெளியாகிறது. 2019 பேட்ட பொங்கல், 2020 தர்பார் பொங்கல்!
ஏற்கனவே நயன்தாரா ரஜினியுடன் 3 படங்களில் நடித்திருந்தாலும். சந்திரமுகிக்குப் பிறகு முழுநீள வேடத்தில் ‘செகண்ட்’ டைமாக தர்பாரில் தான் நடிக்கிறார்.
1991-ல் வெளியான ப்ளாக்பஸ்டர் ஹிட் படம் ’தளபதி’க்குப் பிறகு, ’செகண்ட்’ டைம் ரஜினியுடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பணியாற்றுகிறார்.
கஜினி திரைப்படத்திற்குப் பிறகு ‘செகண்ட்’ டைமாக ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோர்த்துள்ளார் நயன்தாரா.
பேட்ட திரைப்படத்துக்குப் பிறகு ‘செகண்ட்’ டைம் ரஜினின் தர்பார் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்.
கத்தி திரைப்படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் – அனிருத் கூட்டணி ‘செகண்ட் டைம்’ இணைகிறது.
கத்தி படத்திற்குப் பிறகு ‘செகண்ட்’ டைமாக லைகா நிறுவனத்துடன் இணைந்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
கோலமாவு கோகிலா படத்திற்குப் பிறகு ‘செகண்ட்’ டைம் லைகாவுடன் கமிட்டாகியிருக்கிறார் நயன்தாரா.
ஷங்கரின் 2.0 படத்திற்குப் பிறகு ரஜினி – லைகா கூட்டணி ’செகண்ட்’ டைம் இணைந்துள்ளது!