Advertisment
Presenting Partner
Desktop GIF

தெரியாமல் ட்விட் போட்டேன்: பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்

இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

author-image
WebDesk
New Update
தெரியாமல் ட்விட் போட்டேன்: பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்

இரண்டம் குத்து படத்தின் டீஸர் நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனர் சிகரம் பாரதிராஜா ஏற்கனவே தங்களுது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

Advertisment

பாரதிராஜா தனது செய்திக் குறிப்பில், "கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் “இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டில் உள்ள எத்தனை குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?" என்று கவலை தெரிவித்திருந்தார்.

பாரதிராஜாவின் கருத்துக்கு ட்விட்டரில் பதிலளித்த சந்தோஷ் ஜெயக்குமார், பாரதிராஜாவின் டிக் டிக் டிக் படத்தின் போட்டோ ஒன்றை வெளியிட்டு, " இத பாத்து கூசாத கண்ணு, இப்போ இப்ப கூசிருச்சோ" என்று பதிலளித்தார் .

 

இந்நிலையில், சென்னை பிரபல பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா இரண்டம் குத்துவ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

இதற்கிடையே,  இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் பாரதிராஜாவிடம் தனது மன்னிப்பை தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து,அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்

"'இரண்டாம் குத்து' படத்தை இயக்கி, நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீஸருக்கு இயக்குநர் பாரதிராஜா எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கணத்தின் வெப்பத்தில், எனது ட்விட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதைச் செய்திருக்கக் கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

 

தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்கள். அவருடைய சாதனைகளில் 1 சதவீதமாவது நாம் செய்துவிட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வழிகாட்டியாக இருந்திருக்கிறார், இருக்கிறார், எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது.

இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்." என்று சந்தோஷ் பி.ஜெயக்குமார் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

Bharathiraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment