இணையதளங்களில் ‘லீக்’ ஆன இரண்டாம் குத்து: தட்டித் தூக்கிய தமிழ் ராக்கர்ஸ்

Irandam kuthu Tamil movie news: பைரசி முகவரிகளை டெலகிராம் மற்றும் சில சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பி வாடிக்கையாளர்களை இழுக்கின்றன.

Irandam Kuthu full movie leaked to free download in tamilrockers: தமிழ் சினிமாவில் ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த படங்களில் ஒன்று, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைத்துள்ளனர். தீபாவளியையொட்டி இந்தப் படம் ரிலீஸ் ஆனது.

இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். பிக்பாஸ் டேனியல், சாம்ஸ், ஷாலு ஷம்மு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா செய்துள்ளார்.

Irandam kuthu Tamil movie news: தமிழ் ராக்கர்ஸ் vs இரண்டாம் குத்து

இருட்டு அறை படத்தைவிட இந்த இரண்டாம் குத்து இன்னும் மோசமான ஆபாசப் படமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்தப் படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதற்கிடையே இந்தப் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைக்கவில்லை. படம் வெளியான அன்றே திருட்டுத்தனமாக முழுப் படத்தையும் ஹெச்.டி தரத்தில் தனது இணையதளத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. இதர பல பைரசி வெப்சைட்களும் இந்தப் படத்தை தங்கள் இணையதளங்களில் வெளியிட்டிருக்கின்றன.

தமிழ் ராக்கர்ஸ் மற்றும் சில பைரசி வெப்சைட்கள் இந்தப் படம் வெளியாகியிருக்கும் பைரசி முகவரிகளை டெலகிராம் மற்றும் சில சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பி வாடிக்கையாளர்களை இழுக்கின்றன. ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆன சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் சுட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Irandam kuthu full movie leaked to free download in tamilrockers irandam kuthu tamil movie news

Next Story
ஒழுக்கம், கண்டிப்பு, அன்பு: நெட்டிசன்கள் நெஞ்சை வென்ற லாஸ்லியா அப்பா!Losliya Father Mariyanesan Death
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com