ஆங்கிலத்தில் படிக்க : Irfan Pathan shares fan moment with Rajinikanth: ‘A great learning meeting him’
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தனது 170-வது படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படப்பிடிப்பிற்காக தற்போது மும்பை சென்றுள்ள ரஜினிகாந்த் விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா. மஞ்சுவாரியார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து சமீபத்தில் சென்னை திரும்பிய ரஜினிகாந்த், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மும்பை செல்கிறார். இங்கு படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில், அமிதாப் பச்சன் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தலைவர் 170 படத்திற்காக டெல்லி சென்ற நடிகர் ரஜினிகாந்த், டெல்லி விமான நிலையத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான இர்பான் பதானை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சிரித்த முகத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இர்பான் பதான், “நம் நாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ஆனால் இந்த கிரகத்தில் எளிமையான மனிதர். அவரை சந்தித்தது ஒரு சிறந்த பாடமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சாதாரண போலோ டி-சர்ட் மற்றும் கருப்பு டிராக் பேண்டில் எளிமையாக இருந்தது இர்பான் பதானை ஆச்சரியப்படுத்தியது. தீவிர கிரிக்கெட் ரசிகரான ரஜினிகாந்தை முக்கியமான போட்டிகள் சென்னையில் நடக்கும்போது தவறாமல் வந்துவிடுவார். அதேபோல் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் படைத்துள்ள இர்பான் பதான் கோப்ரா படத்தில் விக்ரமுடன் நடித்திருந்தார்.
தற்போது 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வர்ணனையாளராக இருக்கும் இர்பான் பதான், போட்டி நடைபெறும் நகரங்களுக்கு விசிட் அடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டிக்காக சென்னையில் இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“