Advertisment

ஒப்பில்லா திறமை கொண்ட மகா நடிகன் இர்பான் - மலரும் நினைவுகளும், மறக்க முடியா புகைப்படங்களும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Irrfan Khan pictorial tribute to the versatile actor

Irrfan Khan pictorial tribute to the versatile actor

publive-image

Advertisment

கடந்த 2018ம் ஆண்டு முதல் நியூரோ என்ட்ரோசைன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் இர்பான் கான் இன்று (ஏப்.29) காலமானார். அவர் கடைசியாக நடித்த படம் Angrezi Medium. இதில், தனது மகளின் கனவை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லும் தகப்பன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டிருந்தார். (Source: Photo by Express Archive Photo)

publive-image

நாட்டின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவரான இர்பான் கான், 2011ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்று கவுரவிக்கப்பட்டார். பான் சிங் தோமர் படத்தில் அவரது சிறந்த நடிப்புக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதுமட்டுமின்றி, மக்பூல், லைஃப் இன் ஏ மெட்ரோ, தி லன்ச்பாக்ஸ் மற்றும் பல படங்களுக்கு ஏகப்பட்ட விருதுகளை வென்றுள்ளார். (Source: Photo by Express Archive Photo)

publive-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது கூட, அவர் தனது கடைசி படமான Angrezi mediumல் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். (Source: Photo by Express Archive Photo)publive-image

தொலைக்காட்சியில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இர்பான், சலாம் பாம்பே படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். (Source: Photo by Express Archive Photo)

publive-image

பான் சிங் தோமருக்காக ரேகாவிடம் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற இர்ஃபான் கான். அவர் இந்த விருதை பார்ஃபி படத்துக்காக நடிகர் ரன்பீர் கபூருடன் பகிர்ந்து கொண்டார். (Source: Photo by Express Archive Photo)

publive-image

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் அவர் ஆற்றிய கடைசி உரையின் போது, "ஒருவரின் மரண பயத்தை விட மோசமானது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? வாழ்வதும், சாவதும். முரண்பாடுகளுக்கு எதிராக செயல்படும் எல்லாவற்றையும் நான் தொடர்புபடுத்துகிறேன். எனக்கு அற்புதங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது" என்றார். (Source: Photo by Express Archive Photo)

publive-image

இர்ஃபானைப் பொறுத்தவரை, சினிமா மற்றும் நடிப்பு என்பதன் பொருள், "சொல்ல வேண்டிய கதைகள் (தேவைப்படும்), வாழ வேண்டிய தருணங்கள், உங்களுடன் இருக்க வேண்டிய நினைவுகள் மற்றும் பொருள் சார்ந்த விஷயங்கள்." (Source: Photo by Express Archive Photo)

publive-image

லைஃப் இன் எ மெட்ரோ படத்தில் இர்ஃபான் கான். அவர் அந்த படத்தில் கொங்கொனா சென்ஷர்மாவுடன் நடித்திருந்தார் (Source: Photo by Express Archive Photo)

publive-image

The  Lunchbox படத்தில் இர்பான். இப்படம் முழுவதும், உங்கள் கண்கள் இர்பானை பார்ப்பதை தவிர வேறு எங்கும் செல்லாது. (Source: Photo by Express Archive Photo)

publive-image

ரோக் படத்தின் ஒரு காட்சியில் இர்பான் கான் (Source: Photo by Express Archive Photo)

publive-image

'தில்லாகி' எனும் டிவி நாடகத்தில் நடித்த போது, நடிகை நீனா குப்தாவுடன் (Source: Photo by Express Archive Photo)

publive-image

கொலைகாரனாக, கேங்ஸ்டராக, காதலனாக, தோழனாக, கணவனாக, தீவிரவாதியாக என பல்வேறு தோற்றங்களில் நடித்து ரியல் மாஸ்டராக வாழ்ந்து காட்டியவர் இர்பான் (Source: Photo by Express Archive Photo)

publive-image

ஐஸ்வர்யா ராயுடன் ஜப்ஸா படத்தில் இர்பான் கான் இணைந்து நடித்திருந்தார். (Source: Photo by Express Archive Photo)

publive-image

நடிகர் அஷுடோஷ் ராணாவுடன் இர்பான் (Source: Photo by Express Archive Photo)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Irfan Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment