ஸ்ரீதேவிக்காக படம் நடித்துக் கொடுக்கிறாரா, அஜித்?

தமிழில் தன்னுடைய கணவர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து தர முடியுமா? என ஸ்ரீதேவி கேட்டதாகவும், அதற்கு அஜித் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

நடிகர் அஜித், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக தமிழ் படம் ஒன்றை நடித்துக் கொடுப்பதாக சொல்லியிருந்ததாகவும், அந்த படம் விரைவில் தொடங்க இருப்பதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜித், நடிகை ஸ்ரீதேவி நடித்த ’இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் விஜய் நடித்த புலி படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். அந்த படத்தில் அவருக்கு பேசிய படி சம்பளம் தரவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.

இந்த விபரத்தை நடிகர் அஜித்திடமும் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அப்போது, தன்னுடைய குடும்பம் கஷ்டத்தில் இருப்பதாகவும், கடனை அடைப்பதற்காகவே படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன். ஆனால், சொன்னபடி சம்பளம் தரவில்லை என்றும் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

அப்போது, தமிழில் தன்னுடைய கணவர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து தர முடியுமா? என ஸ்ரீதேவி கேட்டதாகவும், அதற்கு அஜித் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்த போதே, ஸ்ரீதேவி திடீரென மரணம் அடைந்துவிட்டார். ஆனாலும் அஜித் சொன்னபடி படம் நடித்து தருவதாக போனி கபூரிடம் உறுதி கொடுத்ததாகவும் தெரிகிறது.

போனி கபூர், பிரபு தேவா இயக்கத்தில் படம் தயாரிக்க விரும்பவதாகவும், அஜித் வேறு ஒரு இயக்குநரை பரிந்துரை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால்தான் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாவதில் சிக்கல் நீடிப்பதாகவும் சொல்கிறார்கள்.

×Close
×Close