தர்பார் ஃபர்ஸ்ட் லுக் ஹாலிவுட் படமான Killing Gunther படத்தின் போஸ்டரை ஒத்து உள்ளதாக நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2020-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வர திட்டமிட்டுள்ள தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
இந்தப் படத்தில் ரஜினியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்கிறார்.
தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக், 2017ம் ஆண்டில் அர்னால்ட் ஸ்வார்ஸோனோகர் நடிப்பில் வெளியான Killing Gunther படத்தின் போஸ்டருடன் ஒத்துப் போவதாகவும், ரஜினியின் முந்தைய படமான ‘பேட்ட’ போன்றே அது இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படம், தனது கதை என்று கதையாசிரியர் மீஞ்சூர் கோபி புகார் அளித்திருந்தார். அவர் தனது புகாரில் முருகதாஸ், எனது கதையை படித்துவிட்டு சேர்ந்து செய்வோம் என்று கூறியிருந்த நிலையில், எனது அனுமதியில்லாமலேயே, அவர் கத்தி என்ற பெயரில் படத்தை வெளியிட்டு விட்டதாக தெரிவித்திருந்தார்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் படமும், அதேபோன்று புகாரில் சிக்கியது. உதவி இயக்குனரின் கதையை முருகதாஸ் திருடி படம் எடுத்துவிட்டதாக புகார் தெரிவித்த விசயம், ஊடகங்களில் சிலநாட்கள் பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.
படத்தின் கதையை மட்டுமே காப்பியடித்து வந்த இயக்குனர் முருகதாஸ், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கூட காப்பியடிக்க துவங்கிவிட்டாரா என்று நெட்டிசன்கள், சமூகவலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Is dharbar firstlook copied from this hollywood movie