scorecardresearch

”பிரியா வாரியர் கண்ணடிக்கும் காட்சிகள் எனது படத்தின் காப்பி”:பிரபல இயக்குனர் பரப்பரப்பு குற்றச்சாட்டு!

பிரியா வாரியர் காட்டிய கண் அசைவுகளை போலவே எக்ஸ்பிரஷ்ன்களை கொடுத்திருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்துள்ளனர்.

Priya-Prakash-Warrier

ஒரு அடார் லவ் படத்தில், பிரியா வாரியர் கண்ணடிப்பது போல் வரும் காட்சிகள் தனது படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக பிரபல மலையாள இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளார்.

மலையாளத்தில் இயக்குநர் ஓமர் லுலு இயக்கத்தில், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்த திரைப்படத்தில் வரும் ‘மணிக்கய மலரய பூவே’ என்ற பாடல் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி பெரும் உச்சத்தை தொட்டது. இன்னும் 10 நாட்களில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தின் பாடல், பெரும் வரவேற்பைப் பெற்று, ஏறக்குறைய 8 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில், நடித்திருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ஒட்டுமொத்த இளைஞர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார். இணையத்தில் முதலில் ‘மணிக்கய மலரய பூவே’ என்ற சிங்கிள் சாங் வெளியானது. அதில், பிரியா தனது காதலனை பார்த்து புருவத்தை தூக்கி, கண்ணடிப்பார். பிரியாவின் இந்த கண் அசைவிற்கு பெரிய  ரசிகர் பட்டாளமே உருவாகியது. பேஸ்புக் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றிலும் பிரியா ஹாட்டஸட் சேன்ஷேனாக மாறினார். அதன் பின்பு, கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, காதலர் தின ஸ்பேஷலாக ’ஒரு அடார் லவ்’ படத்தின் டீசரும் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் தீயாக பரவியது.

இந்நிலையில், தற்போது மலையாள சினிமாவில்’ கிடு’ என்ற மலையாள திரைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பள்ளி பருவ காதலை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள், ஒரு அடார் லவ் படத்தின், டீசர் மற்றும் மணிக்கய மலரய பூவே பாடலில் இடம்பெற்றிருப்பது போல இருப்பதாக, கிடு படத்தைப் பார்த்த பலரும் விமர்சித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகையும், பிரியா வாரியர் காட்டிய கண் அசைவுகளை போலவே எக்ஸ்பிரஷ்ன்களை கொடுத்திருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்துள்ளனர்.

இதற்கிடையில், கிடு படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை தான், இயக்குனர் ஓமர் லுலு தன்னுடைய படமான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் காப்பி அடித்திருப்பதாக கிடு படத்தின் இயக்குனர் மஜீத் அபு பரப்பரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இதுக்குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பேசும் வீடியோ மற்றும், ‘மணிக்கய மலரய பூவே’பாடலில் வருவது போலவே, ‘கிடு’ படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றையும் அவர் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அத்துடன், கிடு படத்தின் ஷூட்டிங் மற்றும் எடிட்டிங் போன்றவை, நவம்பர் 25 (2017) ஆண்டில் முடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் பேசியதாவது “ நான் எந்தவித வாக்குவாதத்தை முன்வைக்கவில்லை. திரைத்துறையில் இதுப்போன்று நிகழ்வது சாதரணமான ஒன்று. ஆனால், ‘ஒரு அடார் லவ்’படத்தைப் பார்த்து கிடு திரைப்படம் எடுத்திருப்பது போன்று ரசிகர்கள் மற்றும் டிவி சேனல்கள் விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்”.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Is priya prakash varriers oru adaar love wink copied from kidu

Best of Express