’நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விடுங்கள்’ – சமந்தாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரசிகர்!

சமந்தா, வேண்டுமென்றால் நீங்கள் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளலாம்.

samantha thirupathi dharshan
samantha

நடிகை சமந்தா நடிப்பில் இந்த வாரம் ‘சூப்பர் டீலக்ஸ்’ வெளியாகியிருக்கிறது.

இதனை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’ஆரண்யகாண்டம்’ என்ற படத்தை இயக்கி, அதற்காக தேசிய விருதையும் பெற்றவர்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர், சமந்தா இனி நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விடலாம் எனத் தெரிவித்துள்ளார்.

ஆம்! “சமந்தா, வேண்டுமென்றால் நீங்கள் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளலாம். உங்களது சிறந்த நடிப்பை சூப்பர் டீலக்ஸில் கொடுத்து விட்டீர்கள். உங்களது திரை வாழ்க்கையில் மிக முக்கியமானப் படமாக இது இருக்கும்” என சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சமந்தா, “ஹா.. ஹா… நீங்கள் என்னைப் பாராட்டுகிறீர்களா அல்லது இன்சல்ட் செய்கிறீர்களா” எனத் தெரியவில்லை” என்றிருக்கிறார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Is samantha gonna retire from acting

Next Story
super deluxe in Tamilrockers: ‘சூப்பர்’ படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்super deluxe box office collection
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com