சிவகார்த்திகேயன் சீரியல் பார்க்கிறாரா? மதராஸி நடிகை சொன்ன முக்கிய தகவல்; முதல் நாள் படப்பிடிப்பு சுவாரசியம்!

மதராஸி படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் சிவகார்த்திகேயன் தன்னை ஏற்கனவே பார்த்ததாகவும் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

மதராஸி படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் சிவகார்த்திகேயன் தன்னை ஏற்கனவே பார்த்ததாகவும் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sivakarthikeyan Mamana

சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் ஒரு நடிகையின் முதல் அனுபவம் எப்போதும் மறக்க முடியாதது. நடிகை மோனிஷா விஜயின் சினிமா அனுபவம் குறித்த சுவாரசியமான தகவல்களை கலாட்டா பிங்க் -க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சன் டிவியில் வெளியான எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான மோனிஷா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த நேர்காணலில், மோனிஷா விஜய் தனது நடிப்புப் பயணம், குறிப்பாக மதராஸி படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றி மனம் திறந்து பேசினார். தான் எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோதே மதராஸி பட வாய்ப்பு கிடைத்ததாக மோனிஷா விஜய் தெரிவித்தார். அப்போது மோனிஷா விஜய்க்கு 16 வயது இருந்ததாகவும் படப்பிடிப்பின்போது அவர் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும் எதிர்கொண்டதாகவும் கூறினார். 

Monisha VijayEth

மேலும், இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் பற்றிப் பேசும்போது, மோனிஷா விஜய், நடிகர் சிவகார்த்திகேயனைப் பற்றி சுவாரசியமான சில தகவலைப் பகிர்ந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் மோனிஷா விஜயைப் பார்த்த சிவகார்த்திகேயன், “நானும் உங்களை எதிர்நீச்சல் சீரியலில் பார்த்திருக்கிறேன். அதில் வரும் சில காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறியிருக்கிறார். இதில் இருந்தே சிவகார்த்திகேயனும் அவ்வப்போது சீரியல் பார்ப்பார் என்பது தெரிகிறது. மேலும் அவர் அப்படி கூறியதும் மோனிஹ்சா விஜய்க்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டதாம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன், தனது சக கலைஞரின் பணியை அங்கீகரித்தது மோனிஷாவுக்கு பெரும் ஊக்கமளித்திருந்ததாகவும் குறிப்பிட்டார். 

Advertisment
Advertisements

இதை தவிர, மோனிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கை, பல்வேறு திறமைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசினார். குத்துச்சண்டை, சிலம்பம், குதிரையேற்றம், இசைக்கருவிகள் வாசிப்பது என பல திறமைகளை வெளிப்படுத்திய அவர், தான் எதிர்காலத்தில் நடிகர் அஜித் குமாருடன் நடிக்க விரும்புவதாக தனது விருப்பத்தைத் தெரிவித்தார். மேலும், அழகு மற்றும் சரும பராமரிப்புக்கு இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும், முடிந்தவரை மேக்கப் இல்லாமல் இருக்கவே தான் விரும்புவதாகவும் மோனிஷா விஜய் கூறினார். 

Entertainment News Tamil Sivakarthikeyan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: