கமல்ஹாசனின் பிக் பாஸ் 2 சறுக்குகிறது: சக்கை போடு போடும் பாம்பு சீரியல்கள்

பிக் பாஸ் 2 வை விட மக்கள் பாம்பு சீரியலை அதிகளவில் ரசித்து பார்க்கின்றனர் என்பது  கடந்த வாரம் வெளியான டிஆர்பி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் 2 வை விட மக்கள் பாம்பு சீரியலை அதிகளவில் ரசித்து பார்க்கின்றனர் என்பது  கடந்த வாரம் வெளியான டிஆர்பி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bigg boss tamil 2

bigg boss tamil 2

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை பெரிதளவில் நம்பி இருந்த  விஜய் தொலைக்காட்சி கடந்த  வாரம்   TRP- யில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது பலருக்கும் நம்ப முடியாத அதிர்ச்சியை தந்துள்ளது.

Advertisment

சின்னத்திரையில் சேனல் டிஆர்பி என்பது ரொம்பவும் முக்கியம்.  ஒரு சேனலின் டிஆர்பி தான் அந்த சேனலை மக்கள் விரும்புகிறார்களா?   தினமும் தவறாமல் அந்த சேனலில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்களை பார்க்கிறார்களா? என்பதையெல்லாம் காட்டும். அந்த வகையில் சென்ற வருடம்  விஜய் டிவியில் ஒளிப்பரப்பான  பிக் பாக்ஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவி நம்ப முடியத  டிஆர்பிக்கு சென்றது.

TRP TRP

குறிப்பாக ஓவியா - ஜூலி  பிரச்சனை நடந்த நாட்களின் விஜய்யின் டிவியின் டிஆர்பியை கண்டு மற்ற சேனல்கள் திக்குமுக்காடின.  போன பிக் பாஸிற்கு கிடைத்த வரவேற்பு  இந்தாண்டு பிக் பாஸ் 2விற்கு கிடைத்துள்ளதா? என்றால் அதற்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.   ஆனால்,  பிக் பாஸ் 2 வை விட மக்கள் பாம்பு சீரியலை அதிகளவில் ரசித்து பார்க்கின்றனர் என்பது  கடந்த வாரம் வெளியான டிஆர்பி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

Advertisment
Advertisements

TRP TRP

 

கடந்த வாரத்தில் அதிகம் பேர் பார்த்த தொலைக்காட்சியாக சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற்றுள்ளது. விஜய் டிவி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.இதில் அதிகம் பேர் பார்த்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் இடம்பிடிக்கவே இல்லை, மேலும் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் சமயத்தில் சன் டிவியில் பாம்பு சீரியலான நந்தினி  மற்றும் வார இறுதி நாளில்  ஒளிப்பரப்பட்ட விஜய்யின் தெறி படத்தை தான் பெரும்பாலான மக்கள் விரும்பி பார்த்துள்ளனர்.

Sun Tv Star Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: