By: WebDesk
Updated: December 25, 2019, 01:09:40 AM
Ishwar Mahalakshmi
Devathaiyai Kanden Serial : கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘தேவதையைக் கண்டேன்’. இதில் ஈஸ்வர், ஹிருத்திகா ஹீரோ – ஹீரோயின்களாக நடிக்க, மகா லட்சுமி வில்லியாக நடிக்கிறார்.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
சில வாரங்களுக்கு முன்னர் ஈஸ்வரின் பிரச்னை பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது தேவதையை கண்டேன் சீரியலில் வில்லியாக நடிக்கும் மகா லட்சுமிக்கும், தனது கணவர் ஈஸ்வருக்கும் தொடர்பு இருப்பதால், தன்னிடம் அவர் விவாகரத்து கேட்பதாக புகார் அளித்தார் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ. இந்த புகாரையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்டார் ஈஸ்வர். பின்னர் ஈஸ்வரும், ஜெயஸ்ரீயும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல விஷயங்களைக் கூறினர்.
’மகாலட்சுமியின் கணவர் அனில்தான் ஜெயஶ்ரீயைத் தூண்டிவிடுகிறார்’ என்றார் ஈஸ்வர். அதனைத் தொடர்ந்து அனிலும், மகாலட்சுமியும் தனித் தனியே பிரஸ் மீட் வைத்து, இதுகுறித்துப் பேசினார்கள். தற்போது இந்தப் பிரச்னை ஒருவழியாக அடங்கியிருக்க, ஈஸ்வரும் மகாலட்சுமியும் நடிக்கும் ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்வர் மகாலட்சுமி வழக்கம் போல ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தாலும், அங்கு ஒரு விதம் இறுக்கம் நிலவுகிறதாம். இதைவிட முக்கியமாக, அந்த சீரியலின் ரசிகர்களிடையே இவர்களின் பிரச்னை ஒருவித எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிட்டதாம். ”மக்கள் மனதில் இருக்கும் பெயரை தக்க வைக்க, தேவையில்லாத சர்ச்சைக்குள்ள சிக்குற ஆர்ட்டிஸ்ட்டுகளை சீரியலை விட்டே தூக்கி விடணும், இல்லை என்றால் அந்த சீரியலையே தூக்கிடணும்” என சேனலின் நலம் விரும்பிகள் கூறுகிறார்களாம்.
அதன்படி தேவதையைக் கண்டேன் சீரியலை முடிவுக்குக் கொண்டு வரும் விஷயத்தை சேனல் தரப்பும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த மாத இறுதியுடன், தேவதையைக் கண்டேன் சீரியலுக்கு, முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, புதுவருடத்தில் புதிய சீரியலொன்றையும் ஒளிபரப்பு செய்யவிருக்கிறதாம் சேனல் நிர்வாகம்.