/tamil-ie/media/media_files/uploads/2019/03/Ispade-Rajavum-Idhaya-Raniyum-Review.jpg)
Ispade Rajavum Idhaya Raniyum leaked online by Tamilrockers
Tamil Rockers: இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியாகியிருக்கிறது.
அதோடு சேர்த்து, இந்தவாரம் ரிலீஸான இன்னொரு படமான ’ஜூலைக் காற்றில்’, கடந்த வாரம் வெளியான ’பூமராங்’ ஆகியப் படங்களும் வெளியாகியிருக்கின்றன.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புது படங்கள் வெளியாவது முன்பு எப்போதையும் விட அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் நடிகர் ஹரீஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் இந்தவாரம் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் தமிழ் ராக்கர்ஸில் லீக்காகியிருக்கிறது.
ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் மற்றொரு படமான ’ஜூலைக் காற்றில்’ திரைப்படமும் இதில் லீக்காகியிருக்கிறது.
தவிர, கடந்த வாரம் அதர்வா, மேகா ஆகாஷ் நடிப்பில் ரிலீஸான ‘பூமராங்’ படமும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது.
இப்படி தொடர்ந்து அனைத்துப் படங்களும் தமிழ் ராக்கர்ஸில் லீக்காவதால், கலக்கத்தில் இருக்கிறார்கள் தமிழ் திரையுலகினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.