சினிமா நடிகைகள் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரை சேர்த்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. தமிழ்நாட்டில் பெரியாரின் சிந்தனைகளுக்கு செவி சாய்த்து, பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்க்கும் வழக்கம் மறந்துப்போன ஒன்று என்றே சொல்லலாம். ஆனால், கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் சினிமை நடிகைகள் பலரும், தங்களது பெயருக்கு பின்னால், சாதி பெயரை சேர்த்துள்ளனர். தமிழ் திரைப்படங்கள் மூலம் ட்ரெண்டான, லட்சுமி மேனன், நித்யா மேனன், பார்வதி மேனன், ஐஸ்வர்யா மேனன், ரகுல் ப்ரீத் சிங், பார்வதி நாயர் என இந்த வரிசை இன்னும் நீள்கிறது.
கோபிநாத்தின் நெறியாளுகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பார்வதி மேனன், பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்துக் கொள்வதில் என்ன தவறு என அழுத்தமாக பேசி இருந்தார். காரசார விவாதங்களுக்கு பின், தனது பெயரின் பின்னால் இருந்த மேனன் எனும் தனது சாதி பெயரை நீக்கிக் கொண்டார். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும், ‘மாற்றம் ஒன்றே மாறாதது, என்றும் ஒற்றுமையுடன் ஜனனி’ என சாதி பெயரை தவிர்த்து பதிவிட்டது, தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் ஆர்வலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
#BeTheChangeYouWantToSee pic.twitter.com/3igfO0I5Ly
— Janani (@jananihere) May 28, 2021
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக தமிழ் படம் 2, ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘நான் சிரித்தால்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தனது பெயருக்கு பின்னால், சாதி பெயர் இருக்கும் சூழலில், தான் வளர்க்கும் செல்ல பிள்ளையான நாய்க்கும் சாதி பெயரை சேர்த்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
வெளிநாட்டின் உயர்ந்த வகை நாய் ஒன்றை வளர்த்து வரும் நடிகை ஐஸ்வர்யா மேனன், அதன் கலருக்கு ஏற்ப ‘காபி’ என பெயரிட்டுள்ளார். தனது செல்ல நாயான காபிக்கு, இன்ஸ்டாகிராமில் ‘CoffeeMenon’ எனும் புதிய பேஜ் ஒன்றையும் ஐஸ்வர்யா மேனன் தொடங்கி உள்ளார். அதில், காபியின் செல்ல சேட்டைகளின் போட்டோக்களையும், வீடியோகளையும் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ஜனனியின் பதிவின் கீழ், ரசிகர் ஒருவர் அவரின் இந்த மாற்றத்திற்கு வரவேற்பை தெரிவித்துள்ளார். அதோடு, நாய்க்கும் ஜாதிப் பெயரை சேர்த்த ஐஸ்வர்யா மேனனின் செயலை கண்டிக்கும் வகையில், காபி மேனனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் ஒன்றினை பதிவிட்டு, என்ன கொடுமை இடு என பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil